கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? துணைக்கண்டமாகத் திகழும் இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி இந்திய ஒன்றியம் என்றுதான் அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர். மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா…
தமிழகத்தை வஞ்சிக்கும் காங்.அரசு – ஆளுநர் உரை மூலம் தாக்கு!
தமிழகச் சட்டப்பேரவை 30.01.14 அன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடியது. சட்டமன்றத்தைத் தொடக்கி வைத்து அரசின் குரலை ஒலிக்கும் ஆளுநர் உரை மூலம் மத்திய காங்.அரசின் புறக்கணிப்பு உணர்வுகள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளாகக் குவிக்கப்பட்டன. “இலங்கையில் இனவெறிப் போருக்குப்பின்னர், இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதநேயமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இதுவும், இலங்கை இனவெறிப்போரின் இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான சிக்கல்களாக உள்ளன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப்…