திருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்
புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனாரின் திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை முன் வெளியீட்டுத் திட்டம் – முனைவர் அ.ஆறுமுகம் பாவேந்தர் பதிப்பகம் திருமழபாடி பேசி 9884265973; 9443949807
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்
( தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) தொடர்ச்சி ) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங) ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான போர்! கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர்! தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர்! என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க வேண்டும் என்பதற்கான போர்! அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச் செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர்! தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙௌ) 5. ஞாலப் போராளி தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய பேராசிரியரே ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப் போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம்…
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்
வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! அகவை தொண்ணூறு நிறைந்த ஆசான் இளங்குமரனார்க்கு அகங்கனிந்த வாழ்த்து வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! புலவர்மணி,முதுமுனைவர் இளங்குமரனார்க்கு வாழ்த்து (பிறந்த நாள் தை 17, 1958 / சனவரி 30, 1927) பளிங்கெனத் துளங்கிடும் பண்புசால் உள்ளம்; உளங்கவர் முறுவல் விளங்கிடும் திருமுகம்; தமிழ்நலன் காத்தல் தம்கடன் என்றே தளரா துழைத்திடும் தறுகண் உறைவிடம்; மறைமலை யார்போல் நிறைவுறு புலமை; பாவாணர் நெறியில் ஓய்விலா ஆய்வு; இலக்குவர் வழியில் இயங்கிடும் தமிழ்மறம்; இனம்,மொழி பேணிட இன்றமிழ் மக்களை…
தமிழ்ச் செல்வங்கள்: ஒல் – முது முனைவர் இரா. இளங்குமரன்
தமிழ்ச் செல்வங்கள்: ஒல் ‘ஒல்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பே! கல் என வீழ்ந்த அருவி ‘ஒல்’ என ஆறாய்த் தவழ்கின்றதாம்! பரஞ்சோதியார் படைப்பு இது! ஒல்லெனத் தவழ்வது சமவெளியில் அன்று! துள்ளி வரும் காட்டில்! அதனால், “கானத்து ஒல்லெனத் தவழ்ந்து” என்றார். மக்கள் செவியில் தென்னை, பனை ஆகியவற்றின் கீற்று காற்றில் ஆடுதல் ‘ஒல்’ என ஒலித்தது. அதனை ‘ஓலை’ என்றனர். பச்சோலைக்கு இல்லை ஒலி என்பதால், காய்ந்த ஓலைக்கு ஒலியுண்டு என்பது தெளிவாகும். ஓலைதான், செவ்வியல் மொழிக் கொடைச்…
தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு விழா, சென்னை
புரட்டாசி 22, 2047 / அட்டோபர் 08, 2016 மாலை 5.00 உலகத்தமிழ்க் கழகம்
மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் – இரா.இளங்குமரன்
மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்; மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள். -புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1
மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3
வல்லானை வாழ்த்துவேன் -புலவர்மணி இரா.இளங்குமரன்
நறுந்தமிழைப் புத்துலகச் சொத்தாக்க முன்னிற்கும் முதன்மையர் உலகத்தார் பெரும்புகழுக் கிலாக்காவீர் என்றறிந்தோ, இன்றமிழுக் கிணையற்ற இலக்காவீர் என்றறிந்தோ, இலக்கியத்தில் தோய்ந்துதோய்ந் திதழ்களுடன் உயர்நூல்கள் இலக்குவணம் படைத்தருள்வீர், இனிதளிப்பீர் என்றறிந்தோ, நிலவுலகில் நேரற்ற நேயத்தொல் காப்பியமாம் இலக்கணத்தை மொழிபெயர்த தாய்ந்தற் களிப்பார்கள் பட்டமெனும் பாங்கறிந்தோ நும்பெயரை இலக்குவனென் றிட்டுள்ளார் நும்பெற்றோர் இசைபெற்ற பெற்றோரே‚ அவர்வாழ்வுப் பயனாகத், தவமாக, முகிழ்த் தோங்கும் ஐம்பதிற்று ஐந்தாண்டுப் பேரிளைஞ‚ பேரறிஞ‚ கைம்மாறு கருதாமல் கடனாற்றும் கடமைவீர‚ தாய்த்தமிழைக் கண்போலத் தனிக் காக்கும் தண்டமிழ‚ தாய்மொழியைக் கப்பார்க்குத் தலைவணங்கு தகவாள‚ தாய்மொழியைப்…
மறைமலையம் – மறைமலை அடிகள் நூல்கள் முன்பதிவுத் திட்டம்
மறைமலை அடிகள் நூல்கள் தொகுப்பு : முதுமுனைவர் இரா.இளங்குமரன் பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம்
இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இலக்குவனார் – இரா. இளங்குமரன்
“தமிழ் மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்” எனும் உயிர்ப்போடு எழுந்தது தமிழ்க் காப்புக் கழகம். “தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!” என்னும் நான்மணிகளைச் செயற்படுத்தும் செம்மாப்புடன் நான்மாடக்கூடல் திருநகரில் ஆடி 22, தி.பி. 1993 / 06.08.1962 இல் எழுந்தது தமிழ்ப்பாதுகாப்புக் கழகம். அதன் தலைவரும் நிறுவனரும் பேராசிரியர் சி. இலக்குவனார். . . . . …
“அந்தணர் என்போர்….” – புலவர்மணி இரா. இளங்குமரன்
தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை. திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார். அரசர் ஒரு சாதி அன்று; வணிகர் ஒரு சாதி அன்று; வேளாளர் ஒரு சாதி அன்று; எவரும் அரசராகவோ, வணிகராகவோ வேளாளராகவோ ஆகலாம். அவ்வாறே, எவரும் அந்தணர் ஆகலாம். அது சாதிப் பெயர் அன்று என்பதன் சான்று இது. அந்தணர்…