எல்லா நாளும் பொன்னாளே! – புலவர்மணி இரா.இளங்குமரன்

ஞாயி றன்று பிறந்தவனே நன்மை எல்லாம் அடைவாயே திங்க ளன்று பிறந்தவனே திறமை பலவும் பெறுவாயே செவ்வாய் அன்று பிறந்தவனே செல்வச் செழிப்பில் வாழ்வாயே புதனாம் நாளில் பிறந்தவனே புகழில் சிறந்து வாழ்வாயே வியாழ னன்று பிறந்தவனே விளங்கும் அறிவில் உயர்வாயே வெள்ளி யன்று பிறந்தவனே வெற்றி யாவும் பெறுவாயே சனியாம் கிழமை பிறந்தவனே சலியா உறுதி அடைவாயே எந்த நாளில் பிறந்தாலும் எந்தக் குறையும் வருவதில்லை. எல்லாநாளும் நன்னாளே எவர்க்கும் ஏற்ற பொன்னாளே இயற்கை தந்த நாள்களிலே எவரே குறைகள் காண்பதுவே. –…

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் புலவர்மணி இரா.இளங்குமரனார்

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பொறியாளர் அமரர் பழ.கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒளிப்படங்கள். சிறப்புரை தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் .   தரவு : கவிஞர் இரா .இரவி

பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்

‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது?   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில்  வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’   ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…

மொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன்

  இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்; மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும் மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன் தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில் குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன் தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா! கெய்சர்…

குறள் நெறி பரப்புக ! – புலவர் இரா. இளங்குமரன்

  1. தமிழன் பெருமை உரைத்ததற்குத்                 தக்க தேதும் உண்டேயோ? அமுதும் எந்தம் மொழி என்றால்                 ‘‘ஆ ஆ’’ உலகில் எத்துணைப் பேர் அமுத மொழியின் திளைக்கின்றார்?                 அளக்க வேண்டாம்’’ எனச் சொல்லி உமிழாக் குறையாய்ப் பழிக்கின்றார்.                 உள்ளம் நைய அம்மம்மா! 2. ‘‘ஆண்ட மொழியெம் மொழி’ என்றால்                 அழகாம் உங்கள் மொழி’யென்று மாண்ட மொழிக்காய் வாழ்வாரும்                 மட்டம் தட்டப் பார்க்கின்றார்; ஆண்டு வந்த அன்னியரோ                 ‘‘அடிமை ஆகிக் கிடந்தீரே! வேண்டும் இந்தப் புக’’…