இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 05: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) 05 இலக்குவனார் அரசர் கல்லூரியில் பயின்ற போதுதான், நூலகத்தில் இருந்த மொழியாராய்ச்சி பற்றிய ஆங்கில நூல்களைப் படித்து, மொழி ஆராய்ச்சி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். கால்டுவெல் எழுதிய ஒப்பற்ற “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண” நூலையும் இங்குதான் கற்றார். தமிழ் மொழியின் தொன்மை, தூய்மை, வளமை, இனிமை முதலியன பற்றி நன்கு அறிந்தார். தமிழ்நாட்டில் பேராயக்கட்சி (காங்கிரசு) பிராமணர்களின் செல்வாக்குக்கு உட்பட்டுப் பிராமணர்களின் தலைமையில் இயங்கி வந்தது. நீதிக்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 03 : ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) இயல் – 2 இலக்குவனார் வரலாறும் கவிதை தோன்றிய சூழலும் வரலாறு, மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. வரலாறு நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுவதாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்று வரலாறாக மலர்கின்றன. உலக வரலாறு, அரசியல், வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் வரலாறு, மொழி வரலாறு, கவிதை வரலாறு என வரலாறு பல வகைப்படும். தனிமனித வரலாறு உலக வரலாற்றுக்கு உறுதுணையாக…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 01: ம. இராமச்சந்திரன்
முன்னுரை செந்தமிழ்ப் பற்றும் சீர்திருத்தக் கொள்கையும் ஒருங்கே பெற்றவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ்ப் புலமையும் தமிழ்த் தொண்டும் வாய்க்கப் பெற்றவர். தமிழ் வளர்ச்சியே தம் உயிர் எனக் கருதி வாழ்ந்தவர். வறுமை வந்து வாட்டியபோதும் செம்மை மனம் உடையவராய்த் திகழ்ந்தார். விருந்தோம்பும் பண்பை அயராது போற்றினார். தவறு கண்டபோது அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர் இவர் என்று கூறலாம். அண்ணாவின் நட்பையும் பெரியார் ஈ. வே. ரா.-வின் பகுத்தறியும் பண்பையும் இனிதெனப் போற்றினார். இந்தி…