அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு
அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு அரசியலில் பங்கேற்க யாவருக்கும் உரிமையுண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதுபோல் திரைத்துறையினருக்கும் அந்த உரிமையுண்டு. என்றாலும் நாட்டு மக்களுக்கு எத்தொண்டும் ஆற்றாமல், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் குரல் கொடுக்காமல், அவர்களின் போராட்டக்களங்களில் தோள் கொடுக்காமல், நன்கறிநிலை(popularity) உள்ளதால் மட்டுமே அரசியல் தலைமையையும் நாட்டுத்தலைமையையும் எதிர்பார்த்து அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது வீண் கனவே!. அப்படி எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக எடுத்துப் போடாதவர்களை அரிசியலில் இறங்கவும் முதல்வர் பதவியை அணி செய்யவும் சிலர் அழைக்கின்றார்கள்…
புழுதிவாக்கம் – இலக்கியக் கூட்டம் கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்
தமிழ்இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்
பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்
பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் : கார்த்திகை 9, 10 – 2045 / நவம்பர் 25, 26 – 2014 எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல மின்னிதழ் <www.akaramuthala.in> thiru2050@gmail.com கலை, அறிவியல் படைப்புகள் யாவுமே பயன்பாட்டிற்குரியனவே. எனினும் தமிழ்வளர்ச்சி நோக்கில் பார்க்கும் பொழுது, கல்வியில் அன்றாடப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்க வேண்டும். ‘தமிழறிவியல்’ அல்லது ‘அறிவியல் தமிழ்’ எனத் தனியாகக் கற்பிக்கத் தேவையில்லை. முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்கள் வாயிலாகப் பயன்பாட்டு முறையில்…
வணங்குதற்குரிய வாரம்!
வணங்குதற்குரிய வாரம்! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும். நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர். ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர். ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…
பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் முதுகலை – உயராய்வுத் துறை எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை கார்த்திகை 10 & 11, 2045 – நவம்பர் 26 & 27 2014
‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார்
‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் திங்கள், 17 நவம்பர் 2014 (18:18 IST) Share on facebook Share on twitter More Sharing Services (கார்த்திகை 1 / நவம்பர் 17ஆம் நாள், தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த நாள்) பழைய இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சிற்குக் கொண்டு வந்தது, உரை எழுதியது, பிற மொழிச் சொற்களை நீக்கியது எனப் பல்வேறு செயல்பாடுகளால் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தினர். இவர்களுள் பலர் எழுத்தால் தொண்டாற்றினர்; சிலர்…
விண் தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சியில் .. இலக்குவனார் திருவள்ளுவன்
இரண்டாம் ஆண்டில் ‘அகரமுதல’
‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறோம். ‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது. நற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும் செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை, அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம்…
தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும் வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை எட்டும் காலம்…
எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்
எங்குமெழுகவே! அகர முதலுடை அன்னைத் தமிழை இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ! தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே! முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய் அகர முதல யிதழெங்கு மெழுகவே! – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்
வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் ஊடகங்களில் உலா வந்த செய்தி உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தி விட்டார். தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும் தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது. அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது…
தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!
தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு! இலங்கையில் பண்டாரநாயக்கா தலைமையாளராக(தலைமைஅமைச்சராக) இருந்தபொழுது 1956 ஆம்ஆண்டில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் அவர் படுகொலைசெய்யப்பட்ட பின்பு,1959இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்,1978 இல் ஐக்கியத் தேசியக்கட்சி அரசாங்கத்தில் இதற்குப் பல வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் தூக்குத்தண்டனை அல்லது மரணத்தண்டனை என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இதனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள்தண்டனைபோல் சிறைவாசியில் தங்கள்வாழ்வைக் கழிக்கின்றனர். சிங்களக் கொடுங்கோல் அரசு சிங்களர்க்கான…
