தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது!   தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்?   கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை!…

இயலிசை நாடகச் செல்வர், இலட்சிய நடிகர் இராசேந்திரன் – இலக்குவனார் திருவள்ளுவன்

இயலிசை நாடகச் செல்வர், இலட்சிய நடிகர் இராசேந்திரன் இலக்குவனார் திருவள்ளுவன் சனி, 25 அக்டோபர் 2014 (16:21 IST) Share on facebook Share on twitter More Sharing Services   தமிழ்த் திரையுலகம், புகழ்மிகு கலைஞர்கள் பலரைத் தந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி நடிகர்கள் தமிழ்த் திரைப்படங்களில் பங்கேற்றுப் புகழ் பெற்று வந்த காலத்தில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து இலட்சிய நடிகரானவர் இராசேந்திரன். நடிகர் திலகம், மக்கள் திலகம் ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த பொழுது இருவருடன்…

அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும்? என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே!  தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது…

பணிமலர் 1. அவ்வளவு தங்கமும் உங்களுக்குத்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

    (என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.) தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார். நான்,“திருவள்ளுவன்” என்றேன். உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார். நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில்…

உலகளாவிய தமிழ்க்கல்வி – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (புரட்டாசி 26, 2045 / 12 அட்டோபர் 2014 தொடர்ச்சி)   பாடத்திட்டங்கள் பாடத்திட்டங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் அமைக்க விரும்புவதே இயற்கை. என்றாலும் கலந்து பேசி சீரான முறையைக் கடைப்பிடிப்பது நன்று. பாடத்திட்டங்கள் மாறினாலும் அவற்றின் அடிப்படை நோக்கத்தில் மாறுபாடு கூடாது.எனவே, பின்வருவனவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.   தமிழ் நெடுங்கணக்கில் – எழுத்துகளில் – கிரந்த எழுத்துகளைச் சேர்க்கக்கூடாது.   கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாத – அயற் சொற்களைக் கலக்காத தலைமுறையை உருவாக்க இஃது உதவும். குறிப்பிட்ட நிலைக்குப்பின்னர் கிரந்த எழுத்துகளைப்…

சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.

சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது. – இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல <www.akaramuthala.in> மின்னிதழ், thiru2050@gmail.com   சங்க இலக்கியங்கள் இனிமைச் சிறப்பும்சாதி, சமய, இன வேறுபாடற்ற பொதுமைச்சிறப்பும் இன்றைக்கும் பொருந்தும் புதுமைச் சிறப்பும் மிக்கன. இவை குறித்து, “வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை; பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை; அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப் பாரித்துரைப்பினும் வையத்துள் வாழ்வாங்கு வாழும் அறநெறிகளை வாய்மை, நட்பு, மானம், தாளாண்மை முதலியவற்றை…

பண்பிலார் அடிபணிகிறதே இவ்வுலகம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

    பண்புடையோரைப் போற்றுவதன் மூலம் பண்பாளர் பெருகுவர். பண்பிலாரை ஒதுக்குவதன் மூலம் பண்பிலார் குறைவர். பண்புளாருடன் பழகப் பழக நம்மிடமும் நற்பண்புகள் பெருகும். பண்பிலார் பழக்கம் தீங்கினைத் தரும். இவையே பழந்தமிழர் பண்புநலனாக இருந்தன. ஆனால், இன்றைக்கு இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. செல்வமும் செல்வாக்கும் உள்ளவர் தீயராய் இருப்பினும் அவருடன் இழைவர். நற்பண்பாளர் குன்றிய செல்வமும் கீழான பதவியிலும் இருப்பின் அவரிடமிருந்து விலகுவர். இன்றைய சூழல் இவையே! நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்கள்…

உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

      அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும்…

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள்ளுவன்

  உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்! நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.   என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் பலரைச் சந்தித்துள்ளேன். மறக்க முடியாத அவர்களுள் இருவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர விரும்புகின்றேன்.   1980 ஆம் ஆண்டில் ஒருநாள்!…

உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!

உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969) என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர். உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும்.    இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்    கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும்…

**தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙூ**

  (புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா? இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற…

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!

  எளிமையின் காரணமாக, இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசிற்கு வாழ்த்துகள்! தங்கள் தலைவியின் நிழலவையாகத்தான் இந்த அரசை நடத்துவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! எனினும் தங்கள் தலைவி, தமிழ்நலச்செயல்களில் ஈடுபட்டதை நிறுத்தாமல் தொடர வேண்டும். தமிழ் ஈழம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். இத்தகைய செயல்கள்தாம் அவருக்கு உலக அளவில் பரிவான போக்கை அமைத்துத்தந்ததை உணர வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைக் கொட்டடியிலும் கொடுமையாக ஈழத்தமிழர்கள்…