இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 3

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…

இலக்குவனார் புகழ் என்றும் வாழ்க!

– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் வாய்மேடு தந்த வண்டமிழ்ப் புலவர் தாய்த்தமிழ் மொழிக்கே தம்மை ஈந்தவர்! தந்தை பெரியார் தன்மானக் கொள்கையைச் சிந்தையில் கொண்ட செந்தமிழ்ச் செம்மல்! மான மறவர்! மாத்தமிழ் அறிஞர்!

தொல்காப்பிய விளக்கம்

–          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி)   எழுத்துப் படலம் நூன்மரபு எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும். க.       எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் என்ப சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.     இந்நூற்பா தமிழ் எழுத்துகள் …

மாமூலனார் பாடல்கள் 3 – எனது மகள் அவனோடு சென்ற வழி?”

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)  எனது மகள் அவனோடு சென்ற வழி?”  – செவிலி.  ஆ! எனது அன்பிற்குரிய மகளே! நானும் உனது தோழிகளும் இப்பொழுது நீயில்லாது தனித்திருந்து  வருந்த விடுத்துச்சொன்றாயே! எப்படிச் சென்றாய்? நமதுவீடு எவ்வளவு பாதுகாவலையுடையது. நன்னன் தலைநராகிய பாழியைப்போல் மிகுந்த காவல் உடையதல்லவா? இக்காவலைக் கடந்து எவ்விதம் சென்றாய்? நீ சென்ற வழியின் தன்மையை முன்பே அறிந்திருந்தாயா? அவ்வழிகளில் கரடிகள் மிகுதியும் உண்டே. இனிய துணைவனைப் பின்பற்றிச் செல்லுதலே  சிறந்த கொள்கை