ஏழாம் ஆண்டில் கற்க கசடற – திருக்குறள் போட்டி , இலண்டன்

  தமிழ் இளையோர் அமைப்பு 7  ஆவது வருடமாகக் கற்க கசடற  – திருக்குறள் போட்டி   வணக்கம்.   தமிழ் இளையோர் அமைப்பின் கற்க கசடற நிகழ்வின் 7 ஆம் ஆண்டு நிரல்   வடகிழக்கு  – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை து.மெ.நி இல்லம்,மனோர் பூங்கா, இலண்டன் (TMK House, 46A East Avenue, Manor Park, London E12 6SQ) வடமேற்கு – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை   ஈலிங்கு அம்மன் கோயில், இலண்டன் (Ealing…

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல்     புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக  கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று வழங்கி வைத்துள்ளார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு, இலண்டன்

தமிழ் ஆய்வு மைய வெளியீடாக, ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய ‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு.  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில்  (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம்  மும்மை  மையத்திலும்  / TRINITY…

இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு யூலை நினைவு நாள்

  பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் எதிர்வரும்  ஆடி 10. 2047 / சூலை மாதம் 25  ஆம்  நாள் அன்று இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு  யூலை நினைவு  நாள் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித  நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது   பன்னாட்டுக் குமுகாயம் தொடர்ச்சியாகப் பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1983ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில்  பன்னாட்டுக் குமுகாயத்தின்…

களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை

களுப்பான தோட்டப் பாடசாலைக்கு அமைச்சர் இராதாகிருட்டிணன் வருகை   கேகாலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும்  பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல்  துணைக்கருவிகளை கையளிப்பதற்கும்   மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  பள்ளிக்கு வருகை புரிந்தார்.  யாழ்ப்பானம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்  இலண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாசு, கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர்  செகநாதான் மாகாண  அவை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள்,…

மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் – நூல் வெளியீடு, இலண்டன்

நூல் வெளியீடு –  மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம் தொகுப்பு – சைவப்புலவர் சிவத்திரு பால.இந்திரக் குருக்கள் , சிட்னி முருகன் கோவில் அவுத்திரேலியா இடம் –          வால்தம்சுடௌ / வோல்தம்சுரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம்   ஆடி 31, 2047 / 15-08-2016 திங்கள்கிழமை  கொடியேற்றம் நேரம் –         பகல் 12-30மணி அளவில் நூல் வெளியீடு நடைபெறும் தொடக்கவுரை-   தத்துவாமிர்தமணி சிவத்திரு பா.வசந்தக் குருக்கள் வாழ்த்துரை –    சிவாகமச்செல்வர் சிவத்திரு கைலை நாக நாதக் குருக்கள், தலைமைக்குரு, இலண்டன் திருமுருகன்…

17ஆவது சைவ மாநாடு, இலண்டன்

 சித்திரை 17 , 2047  / ஏப்பிரல் 30   2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை   சிறப்பு விருந்தினர்:                சிவஞான பாலையா சுவாமிகள்    சித்திரை 18, 2047  / ஏப்பிரல்  மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு, இலண்டன்

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு சித்திரை 11, 2047 (24.4.2016) ஞாயிறு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம், 200-ஏ(A), வளைவுவழிச் சாலை, உயர்வாசல் குன்று, இலண்டன், என்6 5பிஏ. [200A, Archway Road, Highgate Hill, London, N6 5BA]. அண்மைச் சுரங்க வழி: உயர்வாசல் அல்லது வளைவுவழி. அன்புடையீர், வட மாகாணக் கல்வி வளர்ச்சி குறித்து மாநாடு ஒன்றினை நடத்த நாம் திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இம்மாநாட்டில்…