ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20: இலக்குவனார் திருவள்ளுவன்
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும்! தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது “அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!” என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப் புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற…