தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி) அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு 2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன. இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு மெய்த்தி பேரினவாத மனநிலை துணை நிற்கிறது. தமிழினவழிப்பை நிகழ்த்திய முதல் குற்றவாளி சிங்கள அரசே! குக்கி இனவழிப்பை நிகழ்த்தி வரும் முதல் குற்றவாளி…
தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3
(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 3 மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் இந்தச் சிக்கல் தீரும். நாம் தெருச் சண்டைகள் போட்டு இவர்களை விரட்ட முடியாது. அது சரியான நடைமுறையல்ல. இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? சாதிச் சண்டைகள், சமயச் சண்டைகளை ஊக்கப்படுத்திக் குளிர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்
(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி) தீரன் திண்ணியன் தேசத் தலைவன் “களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87) “நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!” பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும்…
போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்
அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு, இலங்கை & ஈழம்
கொழும்பு, கண்டி, நுவரேலியா தமிழ்ப்பயணம் வைகாசி 10 – 15, 2050 24.05.2019 முதல் 29.05.2019 வரை கொழும்பு தமிழ்ச்சங்கம் உயர்கல்வி வழி காட்டும் பயிலரங்கம் முத்தமிழ் ஆய்வு மாநாடு புத்தகக் கண்காட்சி திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம்
இந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்!
இந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்! -மதுரை ஆதீனம்
அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? – இலக்குவனார் திருவள்ளுவன்
அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை! சோர்வும் விடவில்லை! கலைஞர்களைத் தன் சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது! சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது! தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது! ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது! சமத்துவம் காண முடிந்தது! ஆரியத்துடன் இணையவும் முடிந்தது! அன்னைத்தமிழை மறக்கவும் முடிந்தது! கல்விநிலையங்களில் விரட்டப்படும் தமிழால்…
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…
தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!
தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம். அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…
பொங்கட்டும் பொங்கல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கட்டும் பொங்கல்! உழவர் திருநாள் உழைப்போர் திருநாள் உரிமைத் திருநாள் உவகைத் திருநாள் வந்தது இன்று நொந்தது உள்ளம் உழைப்பை மறந்தோம் உரிமை இழந்தோம் உவகை தொலைத்தோம் உண்மை உணர்ந்திலோம்! மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம்! தீரட்டும் துன்பம்! மலரட்டும் ஈழம்! பெருகட்டும் இன்பம்! வெல்லட்டும் தமிழியம்! பொங்கட்டும் பொங்கல்! தங்கட்டும் மகிழ்ச்சி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்
(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது? இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால் அணைத்துக்கொள்ளவும் எனது…