மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4

( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில்…

மாவீரர் உரைகளின் மணிகள் சில!

(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற  விடுதலைத் தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.

மொரிசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண்

  மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது. 

எல்லாளன் வாழ்க! –

– திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329   எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!

மாவீரர் வாழும் பூமி! மறுபடியும் துளிர்க்கும்!!

– புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே

எது சொந்தம்?

–          இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு  அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி    ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும்  புறாக்களாகி    விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து    அருந்தமிழன் தில்லிக்குத்  தீனி  ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட்  டம்போல்   பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித்  தேடி   ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை  அவன்அ  ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்…

முறையற்ற நடவடிக்கைகள்: மூவரையும் விடுதலை செய்க!

– நீதிநாயகம் கே.சந்துரு  இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர் தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து தெரிவித்து வேண்டி உள்ளார்:

இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! -இராமதாசு கண்டனம்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்