தினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் நிழல்  அமைச்சரவை அமைக்கட்டும்!      ‘‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’’ என அதிமுக தலைவர்கள் கூறினாலும் அதிமுகவைத் தடுமாற்றத்தில் தள்ளி இயக்கிக்கொண்டிருப்பது பாசக தலைவர்கள்தாம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆளுங்கட்சிக்கு இணையான வலிமை உடைய எதிர்க்கட்சித்தலைவரைக்கூடச் சந்திக்காத தலைமையர் நரேந்திரர்(மோடி), பத்துபேர் கூட இல்லாத  சிறு பிரிவின் தலைவரை அடிக்கடி சந்திப்பதன்  காரணமும் இதுதானே!  வேளாண்மை நாட்டின் தலைவக இருந்து கொண்டு  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வேளாண்குடிப் பெருமக்களைச் சந்திக்க மறுத்துவிட்டுப் பதவிகளுக்காகப் போராடுபவர்களைச் சந்திப்பதன் காரணமும் என்ன? அதிமுகவில் பிளவை உணடாக்க…

முதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ

முதல்வர் பதவி விலகத் தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை  (21.8.17) சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த  மறுப்பையும் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர்  இசைவு வழங்கவில்லை…

பதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பதவி நலன்களுக்காக  அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்” (ஔவையார், மூதுரை 17) இருப்பவர்களே, அரசியல்வாதிகள் என்பது இன்றைய இலக்கணமாகி விட்டது. எனவே, “ஒருவீர் தோற்பினும் தோற்பதுநும் குடியே”(கோவூர்கிழார், புறநானூறு 45) எனப் பிறர் அறிவுறுத்த வேண்டிய நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளனர்.   இயல்பான போக்கில் அதிமுக வளர்ந்தாலும் தளர்ந்தாலும் ஒன்றுமில்லை. ஆனால், அதிகாரச் சுவையைப் பறிப்பதாகவும் தருவதாகவும் அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தமிழர் நலனுக்கு எதிரான ஒரு கட்சி அதனைச் சிதைத்துக் கொண்டுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் உச்சக் கட்டத்தில் அதன்…

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்!    அ.இ.ம.அ.நி.(அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200 காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது.   தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை,  செங்கிப்பட்டி(தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்தது.    இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குடும்பநலத்துறை இணைச்செயலர்  தத்திரி பண்டா (Dharitri Panda)  தலைமையிலான குழு…

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!   நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்(மூதுரை 10). வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால் எல்லார்க்கும் விளையும் நன்மை என நாம் சொல்லலாம்.   பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன் செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில் அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார்.   பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்விநலனில் கருத்து செலுத்தும்  வண்ணம்…

முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்

முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா?     அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக  ஆட்சிகவிழும்;   தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார்.   பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…