மறக்க முடியுமா? : திருவாரூர் தங்கராசு – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – திருவாரூர் தங்கராசு   “சட்டத்தை எதிர்த்த தோழர்களை எல்லாம் தேடிப்பிடித்து, அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.   1946இல் இந்தியாவில் மேலாட்சி(டொமினியன்) தகுதியுள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அரசியல் வரையறை அவையின் தலைவராக இராசேந்திரபிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை கூடியது. இந்த அவை , அம்பேத்துகார் தலைமையில் அரசியலமைப்புச்சட்ட வரைவுக் குழுவை அமைத்தது.  டி.டி.கிருட்டிணமாச்சாரி, அல்லாடி கிருட்டிணசாமி, கோபால்சாமி…

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை   அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…

மறக்க முடியுமா? : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்     “தேவதாசி/தேவடியாள் (தேவ அடியாள்) ஆஃகா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் தொண்டு புரிபவளே தேவதாசி/தேவடியாள்.” “தேவதாசிகளின் மகிமையைத் தெரிந்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ – அஃது ஒன்றே அவர்களுடைய தெய்வீக இலட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது”   “சாத்திரிகளைக் காட்டிலும், சத்தியமூர்த்தி சாத்திரிகள் ‘தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம்-சட்ட விரோதம்’ என்று கூச்சல் போட்டுப்…

உவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்

உவமைக் கவிஞர் சுரதா   காதல் எப்படிப்பட்டது? வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா, “மலரினும் மெல்லியது காதலே”. காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் – இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”. கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது. காலையில் சூரியனைப் பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் –…

மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார்  அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.   இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார்.   கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி,…

மறக்க முடியுமா? – தமிழவேள் உமாமகேசுவரனார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார்  காலங்களில் முரண்பாடுகள், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா இல்லையா என்பதில் முரண்பாடுகள், அப்படியே இருந்தாலும் எத்தனைச் சங்கங்கள் அல்லது சங்கம் இருந்தது என்பதிலும் கருத்து மாறுபாடுகள் இருந்தன, -இருக்கின்றன அறிஞர்களிடையே ஆனாலும், முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பாண்டியர்கள் என்பது வரலாறு. நான்காவது ‘தமிழ்ச்சங்கத்தை’ மதுரையில் நிறுவினார் பாண்டித்துரையார். உ.வே.சாமிநாதரின் தமிழ் ஆய்வும், தமிழின் முதல் கலைக்களஞ்சியமான ஆ.சிங்காரவேலு அவர்களின் ‘அபிதான சிந்தாமணி’ அச்சாகி வெளிவரவும் காரணமாக இருந்தது மதுரைத் தமிழ்ச்சங்கம். தமிழுலகின் இறுதித் தமிழ்ச்சங்கமாகவும், ஐந்தாவது தமிழ்ச்சங்கமாகவும் உருவானதுதான் ‘கரந்தைத் தமிழ்ச்சங்கம்‘. இச்சங்கம் உருவாகக் காரணமாக…

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன்   அறிஞர்களுள் பன்மொழிப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். கவிஞர்களுள் அப்படி இருந்திருக்கிறார்களா? கவிஞர் குயிலனைத் தவிர, வேறுயாரும் பன்மொழிப் புலமைக் கவிஞர்களாக இருந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற கவிஞர் குயிலன் படித்தது, ஆறாம் வகுப்பு மட்டுமே. இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி (பிள்ளை)-வெயில் உவந்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த கு.இராமலிங்கம்தான் பின்னாளில் கவிஞர் குயிலனாக மாறுகிறார். 1939இல் பருமாவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்…

கோவை கு.இராமகிருட்டிணனுக்கு விருது

கோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம்  – நூல் அறிமுகம்   ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக  நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும்…