இறைவனும் இயவுளும் – பரிதிமாற்கலைஞர்

    உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால் ‘இறைவன்’ எனவும் உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்குவதனால் ‘இயவுள்’ எனவும் பண்டை அறிஞர் எல்லா வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை வலியுறுத்தினர். இன்னஉரு, இன்ன நிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற்பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்து உணர்ந்து வழிபடுதல் வேண்டி வேண்டுதல் வேண்டாமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற அச்செல்வம் பொருளைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாக ஊர்மன்றத்திலே தறியினை நிறுத்தி வழிபட்டார்கள். இதனைக் கந்து என வழங்குவர். (கந்துதறி) மரத்தால் அமைந்த இத்தூண், நாகரிகம் பெற்று…

இலக்குவனார் வணங்கும் கடவுள்

இலக்குவனார் வணங்கும் கடவுள்   சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம் மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்! எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும் தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே! – பேராசிரியர் இலக்குவனார்! – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44 தரவு: பாபு கண்ணன்