தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ங : இலக்குவனார் திருவள்ளுவன்

    ‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று’உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்’ ‘மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது’ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம்’என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி’ ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி’ ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல்’வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர…

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆடி 27, 2045 / 12.08.2014 இல் சிறப்பாகநடைபெற்றது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு இசை – கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் முனைவர் ஈ.காயத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு ‘தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு’ என்னும்நூலை வெளியிட்டார். மேலும் முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் பாடிய‘ஆறுபடைவீடு : திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் ஆறுகுறுவட்டுகள் அடங்கியஒலிவட்டுகளையும் வெளியிட்டார்….

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 5 : ச.பாலமுருகன்

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல். கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 3 : ச.பாலமுருகன்

  (ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி)     3.     நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல். தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து நினைவுச்சின்னங்களும் பேணப்பட, முதலில் அவை பற்றிய தகவல் தொகுப்பு உருவாக்கவேண்டும். பிறகு அந்நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் கட்டாயத்தை உள்ளூர் மக்களிடம் தெரிவிக்கவேண்டும். உள்ளூர் மக்களுக்கு முதலில் அவர்கள் ஊரைப்பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். வருடத்திற்கு ஒன்று/இரண்டு முறை மாவட்ட அளவில் ஒரு கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தப்படவேண்டும். அதில் பள்ளி/கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், உள்ளாட்சிச் சார்பாளர்கள்…

அசோகமித்திரனை வாசித்தல் – கருத்தரங்கம்

 சனி – வைகாசி 24, 2045 /07 சூன் 2014  சீனிவாச சாத்திரி அரங்கம் (காமதேனு திரையரங்கம் எதிரில்) மயிலாப்பூர் சென்னை – 600 004 அமர்வு ஒன்று – 10.00 – 12.30 அசோகமித்திரன் புனைவுலகின் சில பரிமாணங்கள் அசோகமித்திரன் கதைகளில்  திரை உலகம் – அம்சன் குமார் அசோகமித்திரன் கதையுலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் – கல்யாண இராமன் இலக்கிய நயம் பாராட்டும் மரபில் அசோகமித்திரன் கதைகள் – பெருமாள் முருகன் உணவு இடைவேளை 12.30 – 1.45 அமர்வு இரண்டு 1.45…

கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு- மின்மடல் இழை

கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு (மார்ச்சு 30, மாநிலக்கல்லூரி, சென்னை) மின்மடல் இழை அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே, வரும் கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாவது மாநாட்டில் ‘ தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி’ என்பதே மையக் கருத்தாக அமைகிறது. எனவே மாநாட்டிற்குமுன்பே அதுபற்றி இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழகத்தில்மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் தமிழ்மொழித் தொழில்நுட்பத்தில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவைபற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இந்த மின்மடல் இழை தொடங்கப்படுகிறது. மொழித்தொழில்நுட்பம் ( Language Technology)  பேச்சுத்தொழில்நுட்பம் (Speech Technology) ஒளிவழி எழுத்துணர்த் தொழில்நுட்பம் (Optical…

இலக்குவனார் விழா

  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின.   மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாளும் முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.   ம.தி.தா.இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி….

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்  புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…