தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்
ஆடி 05, 2050 – 21.07.2019ஞாயிறு மாலை 5.00 கொங்கு திருமண மண்டபம், கோவை சாலை, கரூர் முனைவர் வா.செ.குழந்தைசாமி கல்வி-ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா பாராட்டுவிழா ப.தங்கராசு, தலைவர் பேசி : 99524 22179
தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்! – இளைய விகடன்
பிற கருவூலம் – இளைய விகடன் (சூனியர் விகடன்) தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்! துரை.வேம்பையன் இராசமுருகன் ‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள். கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்த ஊர் மக்கள், கோயில் குடமுழுக்கு,…
உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா
தமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா வைகாசி 01, 2047 – 21.05.2016 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன்,…
தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்
தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் வைகாசி 16, 2047 / 29/05/2016 ஞாயிறு வள்ளுவர் சமையற்கலை கல்லூரி, கரூர் தலைவர் : இராமநாதபுர மன்னர் குமரன் சேதுபதி, தலைவர், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் தமிழ் ஆர்வலர்கள் மகிழச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழ் இராசேந்திரன் வழக்கறிஞர், கரூர் செயலாளர், கரூர் தமிழ்ச்சங்கம். 9789433344
கரூரில் தமிழ் ஓகப்பயிற்சி
மாசி 16, 2047 / பிப்.28, 2016 காலை 7.00 பயிற்சி : அசித்தர்
திருக்குறள் பேரவை, கரூர் : 29 ஆவது ஆண்டுவிழா
திருவள்ளுவர் நாள் விழா மார்கழி 25, 2046 / சனவரி 10, 2016
தமிழர் பெருவிழா – தமிழர்களம், கரூர்
கார்த்திகை 13, 2045 -நவம்பர் 29, 2014
முப்பெரும் விழா – கரூர்
ஆடி 18, 2045 / ஆக.3, 2014
300 ஆயிரம் பரிசு: திருக்குறள் வினாடி-வினா போட்டி, கரூர்
மத்தியில் மதச்சார்பற்ற அரசு உருவாக வேண்டும்: மு.க.தாலின் பேச்சு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை ஆற்றி வரும் மு.க.தாலின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்குஅளிக்குமாறு கேட்டார்விராலிமலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் மணப்பாறை, வையம்பட்டி, வட மதுரை, மற்றும் குசிலியம் பாறை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கரூர் திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க.தாலின் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை…
கரூரில் தமிழக அரசு சார்பில் ஓவியக்காட்சி
தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில் மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது. வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு ஓவியக்காட்சியைத்…
கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்
கரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது. கவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.