தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்! – கவிக்கோ துரை வசந்தராசன்

தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!   தண்ணீரின் நரையைத்தான் பனியே என்பேன்! தாவரங்கள் தலைநரைப்பைப் பூக்க ளென்பேன்! கண்ணீரின் நரையைத்தான் நெருப்பே என்பேன்! காற்றுக்குள் நரைவிழுந்தால் புயலே என்பேன்! மண்நரையைத் தரிசென்பேன்! மலட்டு வான மனநரையைத் துறவென்பேன்! புழுக்கம் உண்ட விண்நரையை வெண்மேக மென்ற ழைப்பேன்! வெளிச்சத்தின் நரைதானே இருட்டே என்பேன்! சொல்நரையை இழிவென்பேன்! சோகம் தின்னும் சுகம்நரைத்தால் பிணியென்பேன்!பல்ந ரைபோல் வில்நரைத்தால் என்னென்பேன் ? கோழை யென்பேன்! விழுமழையின் நரையைத்தான் வாடை யென்பேன் அல்நரையை ஔியென்பேன் ! ஏழை வீட்டு அடுப்புக்குள் எழும்நரையை வறுமை…

தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை

கார்த்திகை 23, 2048 சனி  09.12.2017 பண்ணைத்தமிழ்ச்சங்கம் தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை – 51   கவியரங்கம் சிறப்புரை விருதுகள் வழங்கல்   கவிக்கோ துரை.வசந்தராசன்

கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? – துரை வசந்தராசன்

கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? உண்டு என்றால் ஒற்றை மகிழ்ச்சி ! இல்லை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஆன்மீ கத்தில் அகப்படும் கடவுள் நாத்திகத்தில் விடுதலையாகிறார் ! தோண்டிப்பார்த்தும் கிடைக்காதோர்க்குத் தொண்டின் வழியாய்த் தொடர்புகொள்கிறார்! உண்டெனச்சொல்லிஉடைகிற மண்டையில் ஔிந்துகிடந்து உருக்குலைவதனால் தன்னம்பிக்கை என்னும் பெயரில் தளர்வறியாமல் தாவிக்குதித்து நாத்திகக் கடவுள் நலமாய் இருக்கிறார்! நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் ! நாத்திகம் அவரைப் பூட்டுவதில்லை! நடைகளைச் சாத்தும் தனிமையுமில்லை! காத்திருந்துவரம் கேட்பதுமில்லை! காதுகள் வலிக்கும் கோரிக்கையில்லை! ஆத்திரம்தீர அழுவதுமில்லை! அடிக்கடி அழைத்து அலைக்கழிப்பதில்லை!…