அண்ணாவன்றோ? – அறந்தைத் திருமாறன்

வெடிக்கின்ற எரிமலையைப் பாய்ந்து சீறி விரிக்கின்ற நெடுநதியை நாளும் ஓயா(து) அடிக்கின்ற கடலையை மேகத் துள்ளே அலறுகின்ற இடியொலிகள் அனைத்தும் பேச்சில் வடிக்கின்ற ஆற்றலர்யார்? கருத்தை யள்ளி வழங்குகொடை வள்ளல் யார்? கொடுமை கண்டு துடிக்கின்ற உளத்தர்யார்? புரட்சியாளர் தொடருக்கே ஒளி விளக்காம் அண்ணா வன்றோ! குற்றால அருவியதின் குளிரும்; நல்ல குலைக்கனியின் சார்தந்த சுவையும்; நஞ்சை வற்றாத தஞ்சையதின் வளமும்; சேர வளநாட்டின் இயற்கையதின் செழிப்பும்; என்றும் முற்றாத செந்தமிழின் இளமையெல்லாம் முழுவடிவாய்ப் பேச்சாலும் செயலால் அன்பால் உற்றாரப் பெருக்கெடுக்கத் தேக்கும் தோன்றல்!…

செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்

ஈரோட் டரிமா இணையற்ற இராம சாமிப் பெரியார் இத்தமிழ் நாட்டில் தோன்றா திருந்தால் தமிழர் யாவரும் ஆரியர்க் கடிமையாய் ஆகி யிருப்போம். இதனில் ஐயம் ஒருசிறி தில்லை. தமிழர் குமுகம் தன்மா னத்துடன் தலைநிமிர்ந் துலவத் தண்ணளி செய்த அண்ணல் ‘பெரியார்’ அன்றி வேறிலை. துணிவும் பணிவும் தூய உள்ளமும் நனியும் பெற்றவர் நந்தமிழ்த் தலைவர். செல்வச் சிறப்பும் சீர்பல பெற்றும் சொல்லில் உரப்பும் சோர்விலா உழைப்பும் தமிழர் நலனே தம்நல மென்றும் பட்டி தொட்டிகள் பலவும் சென்று தமிழர்க் குணவைத் தட்டி ஊட்டி…

புரட்சிப் பாதையில் புதுமை இலக்கியம் – அண்ணாவின் பங்கு : தமிழண்ணல்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தனிச் சிறப்பும் மறுமலர்ச்சிப் போக்கும் உடையதாகும். அது புரட்சியில் கிளைத்துப் புதுமை பூத்துப் பொலிகின்றது. இவ்வளர்ச்சியில் பங்கு பெறும் சான்றோர் பலருள் அறிஞர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலையாய இடம் பெறுகிறார்கள். கொள்கை வேறுபாட்டுக்காகத் தம் கண்களைக் மறைத்துக் கொண்டு உண்மையை மறுத்தல் முறையன்று. ‘‘காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்’’ நம் கடமையாகும். மொழி வளர்ச்சிக்கு இம்முழு நோக்கமே தேவை. இன்று ஓர் இளைஞன் மேடைமீது ஏறி நின்று தலைவரையும் அவையினரையும் பெருமிதத்துடன் விளித்து உயர் குரலில் நடைச்…

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க!

இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

    தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா…

மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்

  (ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” – தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   உச பாடல். அகநானூறு 97    பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து   இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து…

திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

  (ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…

பூங்கோதை 6- வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார். செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம்…

தமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

                எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்                 எண்ணுவம் என்பது இழுக்கு.   தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.   நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும்…

வேண்டாக் கிளர்ச்சி வென்றது! விரும்பும் தாய்மொழி விலகியது! – பேராசிரியர் சி.இலக்குவனார்

  பயிற்று மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்க்கு வேண்டும் என்று சிலர் கிளர்ச்சி தொடங்கினர். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி வாயில்களாக மாணவர்கள் கற்றுவரும் நிலை உள்ளது. ஆங்கிலத்தின் வழியாகக் கற்கும் மாணவர்களே மிகுதியாக உள்ளனர். தமிழ் வழியாகக் கற்றலைப் பையப் பைய மிகுதிப்படுத்துதலைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.   ஆங்கிலேயர் ஆண்டபோது, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. ஆகவே ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, தமிழர் ஆட்சி அமைந்தது. தமிழே ஆட்சி மொழி என்ற…

தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்

  கல்லூரிகளிலும் தமிழைப்  பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில் கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர்.   சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக் கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம் எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது.   கல்லூரிப் புகுமுக…