ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3 இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில் ஆய்வு என்ற பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்….
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும்…
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான். இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும் இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா? ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும், தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர் எம்போன்றோரை எள்ளியே தள்ளினர் எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து…
**தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙூ**
(புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா? இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற…
தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் ஙு – இலக்குவனார் திருவள்ளுவன்
(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட…
தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙீ
(ஆவணி 22, 2045/ செப்.7,2014 தொடர்ச்சி) 6. தமிழ்நாட்டிலுள்ள தற்போதைய மொழிச் சூழலை மாற்றுக: தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள மொழிச் சூழலை உணர வேண்டும். இங்கு, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’, ‘இன்றும் தமிழ்! என்றும் தமிழ்!’, ‘அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’ என்பன போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவாரமாக உள்ளன என்பதுதான் உண்மை. கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சட்ட மொழியாகவும் இறைமொழியாகவும் ஊடக மொழியாகவும் பணிவாய்ப்பு மொழியாகவும் பேச்சு மொழியாகவும் தமிழின் நிலை தேய்பிறையாகத்தான் உள்ளது. ஒரு சாராரின் உரைகள்…
9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கோலாலம்பூர்
9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை 2046 -/ 29 சனவரி – 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2046, தைத்திங்கள் (சனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2015 வரையிலும்) கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க –…