ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்
ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37
கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்
கறுப்புப் பூனை கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது! சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது! –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 31
தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்
தாத்தா – சந்தர் சுப்பிரமணியன் தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது! சட்டைப் பையில் ‘சாக்லெட்டு’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்! வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில்…
வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணப் படம் வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்! காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்! கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 29…
கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில் ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி! புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும் புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்! சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின் தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர் நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய் நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5) சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்! தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத் தமதாக்கி முன்னிலையில்…
கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப் பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம் சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல் தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத் தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர் சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில் நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3) துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி, செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்! கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக் கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்;…
தனக்குவமை இல்லாத் தமிழ்! – சந்தர் சுப்ரமணியன்
தொன்மத்தில் சொல்வளத்தில் தூய்வடிவில் மாறுகின்ற இன்றைக்கும் ஏற்ற எழில்நடையில் – நின்று தினம்வளரும் நேர்இல் திறமிவற்றில் என்றும் தனக்குவமை இல்லாத் தமிழ்! நாவில் நடைபழகி நர்த்தனங்கள் ஆடியொலி மேவி மொழியாக மெலெழும்பும் – பூவில் அனைத்துக்கும் முந்தோன்றி ஆளு(ம்)மொழி கட்குள் தனக்குவமை இல்லாத் தமிழ்! ஓசை வகைவிளம்பி உட்புணர்வுக்(கு) ஓர்முறையைப் பேசுமொழி ஒன்றேகாண் பூவுலகில் – தேசோ(டு) இனிக்கும் இயல்வடிவில் ஏழிசையின் ஈர்ப்பில் தனக்குவமை இல்லாத் தமிழ்! முன்னைக்கு முன்னை முதுமகளோ! இல்லையிவள் பின்னை வருமொழிகொள் பேரெழிலோ! – என்னே! அனைத்து மொழிகட்குள் அன்றின்றென்…