குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது!: கருணாநிதி

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது! கலைஞர் மு.கருணாநிதி ” ‘தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்’ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், திகைப்புத் தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நேற்று (௨-௧௦-௨௦௧௫ ) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.   அதில், அமெரிக்கா…

இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு! மக்கள்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கத்தின் சான்றாவணங்கள்!

  ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம்  திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல் நடத்தியது.     ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே  தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில்  பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள்  முதலான பலரும்  இடம்பெற்றிருந்தனர்.   இத்தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு இனப்படுகொலையை…

இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! -இராமதாசு கண்டனம்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்