கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்

கறுப்புப் பூனை   கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது!   சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது!   –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்   தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது!   சட்டைப் பையில் ‘சாக்லெட்டு’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்!   வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில்…

வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணப் படம்   வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!   காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்!   கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 29…

குட்டி அணில்குட்டி! – சந்தர் சுப்பிரமணியன்

  குட்டி அணில்குட்டி!    கிளைதாவிக் குதிக்கின்றாய்! குட்டி அணில் குட்டி! – நீ தலைகீழேன் நடக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   முதுகின்மேல் மூன்றுவரி! குட்டி அணில் குட்டி! – நீ அதைஏனோ சுமக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   அடைமழையில் நனைகின்றாய்! குட்டி அணில் குட்டி! – உன் குடைவாலைப் பிடிக்கலையோ? குட்டி அணில் குட்டி!   தொடவேண்டும் நானுன்னை! குட்டி அணில் குட்டி! – தொட விடுவாயோ சொல்லெனக்கு! குட்டி அணில் குட்டி!   – சந்தர் சுப்பிரமணியன்

மேன்மையாய் வாழ்வோம்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

மேன்மையாய் வாழ்வோம்! செய்திகள் படிப்போம் சிந்தனை நிறைப்போம்! கைத்தொழில் கற்போம் கவலையை ஒழிப்போம் பொய்சூது விடுவோம் போதும்மனம் கொள்வோம் மெய்யைப் பேசுவோம் மேன்மையாய் வாழ்வோம்! வைகறை விழிப்போம் வாய்விட்டுச் சிரிப்போம்! பைகாசு வைப்போம்! பைய நடப்போம்! வாய்மை காப்போம் வாக்கு நிறைவேற்றுவோம்! தாய்மை போற்றுவோம்! தாரத்தை ஆராதிப்போம்! நாய்தனை வளர்ப்போம்! நன்றியை மறவோம்! வாய்ச்சவடால் செய்யோம்! வாலிபனாய் வாழ்வோம்! எய்அம்பாய் மெய்செய்வோம்! எங்கும்சென்றே நலமாக்குவோம் நய்நய்என நச்சரியோம்! நண்பர்களைச் சேர்த்திடுவோம்! பாய்விரித்தே படுத்திடுவோம் பஞ்சுமெத்தை தவிர்த்திடுவோம்! நோய்நொடி விரட்டிடுவோம் நூறைக்கடக்க வழிகண்டோம்! மாம்பலம் ஆ.சந்திரசேகர்…

பண்பாளருக்குப் பரிசு -செல்வி

பல்கேரிய நாட்டுச் சிறுகதை பண்பாளருக்குப் பரிசு   கதிரவன் மறைந்து நிலவு வந்தது. தன் வருகையை மகிழ்வுடன் வரவேற்காமல் கதிரவன் மறைவிற்குப் பூமி வருத்தமாக கருப்பு ஆடையை அணிந்து கொண்டு இருக்கிறதே என நிலா சினங்கொண்டு முகில் கூட்டத்தில் மறைந்தது.   இருள் சூழ்ந்த  இந்த நேரத்தில் ஏழ்மைத் தோற்றத்தில் இருந்த முதியவர் ஒருவர் அந்த ஊருக்குள் நுழைந்தார். ஊரின் தொடக்கத்தில் தெரிந்த பெரிய மாளிகை ஒன்றினுள் நுழைந்தார். அவ் வீட்டில் இருந்த பெண்மணியிடம்  ”அம்மா இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கின்றேன்”  என்று…

ஆயிசா நடராசன் ஆய்வரங்கம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்ப்படைப்புத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் ஆயிசா நடராசன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்து ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பார்ககிறோம்                    நாள் : புரட்டாசி 11, 2045 / 27.09.2014 மாலை 3மணிமுதல் 8மணிவரை       இக்சா மையம், பாந்தியன் சாலை, கன்னிமரா நூலகம் அருகில், எழும்பூர், சென்‌னை 600 008

அத்தத்தா…… (மழலை மொழி மயக்குறும் மந்திர மொழி)

கொஞ்சு மொழி பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!! –முனைவர். ப. பானுமதி வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வரையறையின்நி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது அன்றாட நடைமுறையாகி விட்டது. “அத்தத்தா என்னும் நின்தேமொழி கேட்டல் இனிது”     சங்கத் தாயின்  மகிழ்ச்சிச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை ‘அத்தத்தா….’ என்று பிஞ்சு வாயில்…

ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு

 “தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா?  அப்பாவும் நானும், முன்பே  எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!”  “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!”  “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…

தமிழைப் போற்ற வாருங்கள்!

– இளவல்   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…