கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…

தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!

  ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்!   அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்!   அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்!   அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்

(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3  தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3   கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன?  போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!  ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை  இது. நாம் எமது…

முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்; எதிர் வரும் ஆகத்து 14 , 2016 அன்று  தொறொன்ரோவில் நடைபெற இருக்கிறது. இதில் பார்வையாளர்களாகவோ பங்கேற்பவர்களாகவோ கலந்து கொள்ளுமாறு நா க த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சு உங்களை அன்புடன் அழைக்கிறது. காலம்: ஞாயிறு,  ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 நேரம் : காலை 8.00 – மாலை 6.00 இடம்:  பிர்ச்சுமவுண்டு அரங்கம் [Birchmount Stadium,…

பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு …. : க.சச்சிதானந்தன்

பிறக்காத தமிழ்க் குழந்தைக்கு   அளவிலாத காலமென்னும் அலையின் மீது அலைகளாய் அழிவிலாது தோன்ற நிற்கும் அமரனான பாலனே உரிமை கேட்டு உடைமை கோரி உலகமெங்கும் போற்றவே தருமமென்ற நெறியின் போரில் தமது மண்டை யுடையவே ஒழுகி வந்த இரத்த ஆற்றில் உதய மாகிக் கன்னியர் பழகு பாடற் கருவிலாகும் பாலனே என் செல்வமே கட்டு மீறி உரிமை நாதக் கனல் பிறக்கும் குரலிலும் சொட்டு கின்ற வியர்வை மீதும் தோன்று கின்ற பாலனே மனது தோறும் எழுதி வைத்த மான மென்னும் முத்திரை…

அவளும் அப்படித்தான்! – பவித்திரா நந்தகுமார்

அவளும் அப்படித்தான்! அம்மா முத்தமிட தந்தை பாசமாய் வருடி விட தமையன் தங்காள் செல்லச் சண்டையிட பள்ளி சென்று வந்த நங்கைதான் இவள் அவளும் அப்படித்தான் சென்றாள் தமையன் வீடு வரவில்லை என ஏங்கியவள் தொடராகத் தங்கையவளை உயிரற்ற உடலாய் ஆடையின்றிக் கண்டவள் தகப்பனின் உயிர்த் துடிப்பை அறிந்தவள் அப்படித்தான் அவளும்  சென்றாள்  குடும்பம் எண்ணாமல்  தன் இனம் காக்க…. வெறுத்து விடவில்லை அவள் கடும் பயிற்சி கண்டு சோர்ந்து விடவில்லை அவள் இலட்சியக் கொள்கை ஆயுதம் கையில் எடுத்தாள் உடன் தோழிகளோடு மணக்கோலம்…

பொழிவது அனல் மழை தானே! -பவித்திரா நந்தகுமார்

பொழிவது அனல் மழை தானே! விடுதலை வேண்டி வீழ்ந்தவர் உணர்வைப் பாடிட வேண்டும் வா மழையே! விதைக்குள் வீரம் வெளிக்கிடும் நேரம் தழுவிட வேண்டும் வா மழையே! ஈழ மண்ணில் வீசுகின்ற காற்றும் கூட காவியம் ஈகம் செய்த மாவீரம் எங்கள் வாழ்வியம் மெல்ல சாரல் பூவைத் தூவிடு சாதனைகள் பாடிடு சந்ததியை வாழ வைக்கும் கல்லறையைத் தழுவிடு களம் பல ஆடித் தாய் நிலம் காத்த விழி தொட வேண்டும் வா மழையே! காவியப் பூக்கள் கால் தடம் தேடி கரைந்திட வேண்டும்…

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்

முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

முகிழ்த்து முழங்கிடும் மீண்டும் தமிழீழம்! முள்ளி வாய்க்காலில் முடங்கிய தமிழினம், துள்ளி மண்மீட்கத் துணிவுடன் எழுந்து, கள்ளச் சிங்களர் கயமைக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் புலன்கள் ஓயாது! முதிர்ந்த அறிவோடு தமிழினம் காத்திடும், மற்றொரு தலைவனை மீண்டும் பெற்று, மாற்றுச் சிந்தனை அரசியல் செய்து, முயன்று போராட்டம் தொடர்ந்து நடத்தினால், முன்பு வாய்க்காத மாபெரும் வாய்ப்புகள் மலர்ந்து மணம்வீசி முகிழ்க்கும் ஈழம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி