தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! – கிருட்டிண திலகா
பா வகை: கலி மண்டிலம். தமிழினமே பெருமையுறத் தமிழ்நாடு பிறந்ததுவே! ஆண்டதொரு ஆங்கிலேயர் ஆட்சியிலே வைத்தாரே.. வேண்டாத மதராசு வென்றதொரு பெயர்மாற்றம். நீண்டகாலப் போராட்டம் நிலைத்தது நற்பெயராய்க் கொண்டதொரு தமிழ்மொழியால் கண்டோமே தமிழ்நாடு. 2. சங்கரலிங் கனாரேற்றார் சாகும்வ ரைஉண்ணாது மங்காதப் புகழ்பெற்றார். மகத்தான உயிர்நீத்தார். தங்கமான சின்னதுரை தந்தாரே தீர்மானம். எங்கெங்கும் தமிழ்நாடு இசையாகப் பரவியது. 3. நிதியமைச்சர் பேசினாரே …
உலகெங்கும் பொங்கல் திருவிழா! – இலக்குவனார் திருவள்ளுவன்
உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி! – இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள்! 1885 இல் தொடங்கப்பெற்ற பேராயக்கட்சியில் 1919 இல் 36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின் 100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி); ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132…
கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்
ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வைகறை 5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர் பாதிரியார் (Bishop Heber) கல்லூரி, திருச்சிராப்பள்ளி உரையாளர்கள்: முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) [கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.] பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட…
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன) எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் –…
ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!
தமிழ்நாட்டில் நெல் விற்பனையாகாமல் தேக்கம் ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை! ஆந்திரத்திலிருந்தும் கருநாடகத்திலிருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கான பாரம்(டன்) நெல்லை, தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் அரைவை ஆலைகளுக்குத் தனியார் வணிகர்கள் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டில் காவிரி நீர், பாலாற்று நீர் தடுக்கப்பட்ட நிலையிலும் கடுமையான வறட்சியிலும் உழவர்கள் பெருஞ்செலவு செய்து உற்பத்தி செய்த நெல், விலை போகாமல் தேங்கிக் கிடக்கிறது. கடும் உழைப்பைச் செலுத்தி விளைவித்த…
காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…
தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி
தமிழ்நாடு புதுமை கண்டு வாழ இன்று போர் செயுந் தமிழ்நாடு – மறப் போர் செயுந் தமிழ்நாடு – மிக முதுமை கொண்ட பழமை வீழ மோதிடும் தமிழ்நாடு – வீழ மோதிடும் தமிழ்நாடு! திசையை, விண்ணை, வென்று நின்று சிரித்திடுந் தமிழ்நாடு – எழில் சிரித்திடுந் தமிழ்நாடு – கொடி அசைய உயர மண்ணில் நிற்கும் கோபுரம் தமிழ்நாடு – கலைக் கோபுரம் தமிழ்நாடு! காவிரிநதி பாயுங் கழனிக் கண்ணொளி பெறும்நாடு – முக் கண்ணொளி பெறும்நாடு – பொழில் பூவிரிநறும் புனல்வி…
மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து
மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை
வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது. வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம். தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும். …