தோழர் தியாகு எழுதுகிறார் 110: புதிய அறிவாய்தங்கள்

(தோழர்தியாகுஎழுதுகிறார்  109 : ‘ஆளுநர்உரை’ – ஓர்ஊடுநோக்கு (3) தொடர்ச்சி) புதிய அறிவாய்தங்கள் இனிய அன்பர்களே! பெருந்தொற்றுக் காலத்தில் நான் முகநூல் இடுகைத் தொடராக எழுதிய         நூல் – தமிழ்நாட்டில் திரவிட, தமிழ்த் தேசிய ஆளுமைகளிடையே வெடித்த அறிக்கைப் போரில் என் இடையீடு – ஈழம் மெய்ப்படும் –  நீண்ட காலத் தாழ்வுக்குப் பின் அச்சேறி  நூலாக வெளிவந்துள்ளது.  பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற என்னுரைக்கு மறுப்பாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் எழுதிய நூல் திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? இந்நூலில் அவர் தேசிய இனச் சிக்கல்…

தோழர் தியாகு எழுதுகிறார்  109 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)

(தோழர் தியாகு எழுதுகிறார்  108: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’- ஓர் ஊடுநோக்கு (4) இலவு காத்த கிளியாகத் திமுக அரசு நலங்கிள்ளி எழுதுகிறார் ஆகத், தோழர் பொன்முருகு பொதுத்தேர்வு(நீட்டு) கட்டாயப் பயிற்சி தேவை என்கிறார். தோழர் பொன்முருகு கூறுவது அநியாயம். மருத்துவராக விரும்பும் மாணவர்களுக்குப்பொ.தே.( நீட்டு) பயிற்சி அளிப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாய ப்பொ.தே.(நீட்டு) பயிற்சி கூடாது என்கிறேன். மருத்துவராகவே விருப்பமில்லாத மாணவரைப் பொ.தே.( நீட்டு) எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது மாணவர்களின் விருப்பத் தேர்வில் தலையிடுவது. இதைத்தான்…

தோழர் தியாகு எழுதுகிறார் 108: இசுலாமியர் தொடர்பான உரையாடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 107 : ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இசுலாமியர் தொடர்பான உரையாடல் தொடர்கிறது. நலங்கிள்ளி ஓர் ஐயம் தெரிவித்திருந்தார் (தாழி மடல் 69): சங் பரிவார் இசுலாமியர்களை எதிர்க்கிறார்கள், உண்மைதான். ஆனால் அந்த எதிர்ப்பில் ஓர் ஐந்து விழுக்காடு அளவுக்குக் கூட கிறித்துவர்கள் மீது காட்டுவது இல்லையே, ஏன்? மசூதிகளைக் குறிவைக்கும் கடப்பாரைகள் தேவாலயங்களைக் குறி வைப்பதில்லையே, ஏன்? நலங்கிள்ளியின் வினாவுக்கு விடையளிக்க முற்பட்ட நான்“எனக்குத் தோன்றும் காரணங்கள்” என்று 6…

தோழர் தியாகு எழுதுகிறார்  107 ; ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3)

 (தோழர் தியாகு எழுதுகிறார்  106: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)– தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்  107: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3) கண்டால் வரச் சொல்லுங்கள் – கல்விக் கொள்கையை! இனிய அன்பர்களே! ‘ஆளுநர் உரை’ தொடர்பாக எழுந்த சிக்கல் ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இந்திய வல்லரசியக் கொள்கைகளிலிருந்தும் விளைந்த ஒன்று என்பதுதான் நான் வலியுறுத்த முற்படும் செய்தி. தமிழ்நாட்டரசு எழுதிக் கொடுத்ததை இரவி உள்ளவாறே படித்திருந்தால் அதிலிருந்து அரசின் கொள்கைகள் தெரிய வரும். ஆகவே ‘ஆளுநர்…

தோழர் தியாகு எழுதுகிறார்  106:  ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)

(தோழர் தியாகு எழுதுகிறார்  105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)– தொடர்ச்சி) ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2) பொதுத்தேர்வு(நீட்டு ) விலக்கு: செய்வதறியாத் தவிப்பு நலங்கிள்ளி எழுதுகிறார் “தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது   தலைமைக்கு  எடுத்துக்காட்ட வேண்டும்” என்று (தாழி மடல் 71இல்) நீங்கள் சொல்வது எனக்கு உள்ளபடியே வேடிக்கையாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில், சமூக வலைதளப் பதிவுகளில் திமுக உயர் மட்டத் தலைவர்களிடமிருந்து சாதாரணத் தொண்டர்கள் வரை ஆங்கிலத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு…

தோழர் தியாகு எழுதுகிறார்  105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)

 (தோழர் தியாகு எழுதுகிறார் 104 : போக்கி – தொடர்ச்சி)  “வீழ்வது தமிழாக இருப்பினும்…?” இனிய அன்பர்களே! ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனமான சொல்லும் செயலும் கிளறி விட்டுள்ள சிந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டரசின் இறைமைத் தகுநிலை தொடர்பானது. ஒவ்வோராண்டும் சட்டப் பேரவையின் முதல் அமர்வில் ஆளுநர் வாசிக்கும் உரை என்பது மாநில அரசின் கொள்கை அறிவிப்பாக இருப்பதுதான் மரபு. இதில் ஆளுநரின் சொந்தக் கருத்துக்கு இடமில்லை. மாநில அரசு எழுதிக் கொடுக்கும் உரையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அந்த உரையை அப்படியே…

தோழர் தியாகு எழுதுகிறார்  104: நலக்கேடு நல்காப் போக்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி) நலக்கேடு நல்காப் போக்கி இனிய அன்பர்களே! பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம். காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது…

தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 8

(தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 8 யமுனா ராசேந்திரன் அன்பர் விசுவுடன் என்னை நேர்கண்டு எடுத்த செவ்வியின் மூன்றாம் இறுதிப் பகுதி இதோ: யமுனா: தமிழ்த் தேசியப் இனப் போராட்டத்தினூடே  தென்னிந்தியத் தேசிய இனங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய அரசியல் என்ன நிலைபாடு எடுக்கும்? தியாகு: தேசிய இனங்களில் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன.  கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலையாளத் தேசியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது இந்திய…

தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7

(தோழர் தியாகு எழுதுகிறார் 99: பதிவுகள் தளத்தில் செவ்வி 6 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 7 இதற்குப் பிற்பாடு தலைமை தொடர்பான கேள்வி வருகிறது. குமுகிய(சோசலிச)ப் புரட்சிக்குப் பாட்டாளி வருக்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். ஆனால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகரச் சனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொதுவான புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணக்கப்படுத்துவதற்குப் புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்துவதற்கு – பொது எதிரிக்கெதிராக இந்த அணிவகுப்பை…

தோழர் தியாகு எழுதுகிறார் 99 : பதிவுகள் தளத்தில் செவ்வி 6

(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6 யமுனா : பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி…

தோழர் தியாகு எழுதுகிறார் 98 : பதிவுகள் தளத்தில் செவ்வி 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 97: பதிவுகள் தளத்தில் செவ்வி 4- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 5 தமிழ்த் தேசியத்தின் ஓர்மையும் பன்மையும் யமுனா:   நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசியம் ஒரு பலப்பண்பாட்டு(மல்ட்டி கல்ச்சுரல்) மன்பதையாக இருக்குமா? தியாகு: இல்லை – ஒரு பகுதி, சிறுபான்மையர் இருப்பர். ஆனால் முதன்மை மன்பதை (main stream) ஒன்று இருக்கும். பலப்பண்பாட்டு குமுகத்தில் முதன்மை மன்பதை (main stream) என்ற ஒன்று இருக்காது. அப்படிப் பார்ப்பது தமிழர் தாயகத்தை மறுப்பதாகும். தமிழர்களின் தாயகம்தான் தமிழ்நாடு  தமிழ்…

தோழர் தியாகு எழுதுகிறார் 97 : பதிவுகள் தளத்தில் செவ்வி 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 96: பதிவுகள் தளத்தில் செவ்வி 3- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 4 அடுத்ததாகத் தேசிய இயக்கத்தில் வரும் இராணுவவாதம் தொடர்பாகப் பார்ப்போம். இராணுவவாதம் என்பது தேசிய விடுதலை இயக்கத்தில் மட்டுமல்ல, குமுகவியத்திலும்( சோசலிசத்திலும்) வந்திருக்கிறது. நிறஒதுக்கலுக்கு எதிரான ஏ.என்.சி.யின்  (ஆப்பிரிக்க தேசியப் பே்ராயம்) போராட்டத்தில் கூட வந்திருக்கிறது. மண்டேலா இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அரசியல் போராட்டப் பட்டறிவுகளிலிருந்து முதிர்ச்சியடைவதற்கான நீண்ட வாய்ப்பு ஏ.என்.சி.க்கு இருந்தது.  ஆனால் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அம்மாதிரிப் பட்டறிவுகள் இல்லை. நிரம்பவும்…