பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்! – ஞா.தேவநேயன்

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்   இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள் – மறைமலையடிகள்

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்!   திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, ‘தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். –…

குறள்மலைச்சங்கத்தின் முதல் குறள்கல்வெட்டு திறப்பு, மலையப்பாளையம்

வணக்கம். பேரன்புடையீர்! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று  குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக முதல் குறள் மலைமீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து,  ஆனி 19, 2047 /  2016 சூலை 3 ஆம்  நாளன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.  குருமகாசந்நிதானங்களின் அருளாசியுடன், மதிப்புமிகு நீதியரசர். ஆர்.மகாதேவன் அவர்களும், உயர்திரு விஞ்ஞானி. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், உயர்திரு.மதிவாணன் அவர்களும், திரு வி.சி.சந்தோசம் அவர்களும் முதல் குறளைத்திறந்து வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்கள். அதுசமயம்…

உலகநூல் திருக்குறள் ஒன்றே! – இரா.இளங்குமரன்

உலகநூல் திருக்குறள் ஒன்றே!  வள்ளுவர் பார்வை உலகப்பார்வை, ஒவ்வொருவரும் உலகவராம் பார்வை. அதனாலேயே தம்மையோ, தம் மண்ணையோ, தம் மண்ணின் மொழியையோ, தம் அரசையோ, தம் இறைமையையோ சுட்டினார் அல்லர். ஆதலால், உலகுக்கு ஒரு நூல் என உலகவரால் வள்ளுவம் கொள்ளப்படுகிறதாம். உலக மறைநூல் ஒன்று காண்டல் வேண்டும் என்னும் காலமொன்று நேரிடும்போது ஒரே ஒரு நூலாக நிற்க வல்லதும் வள்ளுவமேயாம். புலவர் மணி இரா.இளங்குமரனார் : உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்

உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! – ந.சேதுரகுநாதன்

உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே!   பகைவரால் எய்யப்படுகின்ற அம்புகளும் எறியப்படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாதவாறு, உடல் முழுதுந் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை ‘மெய்ம்மறை’ என்று வழங்குவது தமிழ்மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை எனப் பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற படைக்கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் ‘மறை’ என்ற பெயர் பெறும். அரண்போல நின்று காத்து உதவும் நூல் ‘ஆரணம்’  என்று கூறப் பெறும். மறை, வேதம் என்று பெயர் பெறும் நூல்கள் ‘ஆரணம்’…

குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !

குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்!   வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட  ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர்  தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்!     அரசியலாளர்களுக்கும் பிறருக்கும்  உள்ள இலக்கணமே வாக்கு  மறப்பதுதானே! இதைச் சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? நான் அந்த வாக்கினைக் கூறவில்லை. ஆனால் இந்த ‘வாக்கு’ மறப்பதும் இன்றைய மக்களின் இலக்கணம்தான்; எனினும் கூறித்தான்  ஆக வேண்டியுள்ளது.   தேர்தல் முறைக்கு முன்னோடிகள் தமிழர்கள்தாமே!  பரமபரை முறை இல்லாமல் வாக்களித்து நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கும்  மக்களாட்சி முறைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்தாமே! ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அனைவரும் ‘வாக்கு’ என்ற சொல்லையே மறந்துவிட்டனர் போலும்!  யாரும் வாக்கு…

மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு 2/2 தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து : நூல்களின் பங்கு 2/2   சிறந்த அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மாமேதை சாக்ரடீசுக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இளைஞர்களைச் சிந்திக்க வைத்த அந்த மேதை நஞ்சு அருந்தி இறக்க வேண்டும் என்பது தண்டனை. சாக்ரடீசு அதற்காகக் கவலைப்படவில்லை. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவந்தது. சிறையில் இருந்த சாக்ரடீசு அந்நாட்டின் ஒரு கவிஞர் எழுதிய கவிதைகளைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் வியந்து அவரிடம் படிப்பதற்கான காரணத்தைக்…

புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 1/3

1   சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு வகையான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங்காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட…

மாசிலாக்கருவூலம் – காவிரிமைந்தன்

மானுடம் முழுமைக்கான மாசிலாக்கருவூலம் இட்டது ஈரடிகூட இல்லை! இருப்பினும் தொட்டது வான்புகழ் என்றார்! சொற்களில் சுருக்கம் வைத்து பொருள்தனின் பரப்பை நீட்டும் வையத்தின் பொதுமறை தந்த – திரு வள்ளுவன் புகழ்தான் என்ன? பாலென மூன்றைப் பிரித்து – அதி காரங்கள் நூற்று முப்பத்து மூன்றெனக்கண்டு உலகம் வழக்கத்தில் கொண்டு உள்ள தலைப்புகள்தனிலே குறள்கள் பத்து வாழைதான் குலைதான் தள்ளி வைத்ததைப் போல அழகு வழிவழி வந்தவரெல்லாம் வாசித்து மகிழமட்டுமின்றி.. வழியாய் பூசித்து ஏற்கவைத்தார் வாசுகி கணவர் அன்றோ? ஆக்கமும் ஊக்கமும் அங்கே பாக்களாய்…

திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்

திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல்   உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள…

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!  திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.  அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி