திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்
திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++ வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்
திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார்? ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்? வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள் போகும் இடமெல்லாம் எடுத்தேதான் செல்கிறாள்… இன்னும் எழுதாக் கவிதைகளை! +++ ஒப்படைத்து விட்டாள் சொற்களைக் கவிதைகளாக்கி வாசகர் வசம்..! வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்
திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல் வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு! பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள்! யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்? வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்
தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி
தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே! பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் ! கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்
திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு! திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைத் தொல்லியல் – வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலையில் உள்ள படியூர் அருகே சின்னாரிபட்டி ஊரிலுள்ள கம்பத்தீசுவரர் கோயிலில், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் – வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் க.பொன்னுசாமி, ச.இரஞ்சித்து, இரா.செந்தில்குமார், பொறியாளர் சு.இரவிக்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…
புத்தகத்திருவிழா 2016, திருப்பூர்
தை 15, 2047 / சனவரி 29, 2016 முதல் தை 24, 2047 / பிப்பிரவரி 7 வரை
தாய்த்தமிழ்ப்பள்ளிகள், திருப்பூர், முப்பெருவிழா
தை 24, 2047 / பிப். 07, 2016 தாய்த்தமிழ்க்கல்விப்பணி அறக்கட்டளை
133 பறையிசைக்கத் திருவள்ளுவர் சிலை திறப்பு, திருப்பூர்
தை 24, 2047 / பிப்பிரவரி 07, 2016
சிற்றூர்ப் பூசாரிகள் மாநாடு – வீரத்தமிழர் முன்னணி
ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 திருப்பூர் சீமான்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – மறுமலர்ச்சி மாநாடு
ஆவணி 29, 2046 / செப்.15, 2015 திராவிட இயக்க நூற்றாண்டு விழா திருப்பூர் – பல்லடம் மறுமலர்ச்சி தி.மு.க. வைகோ
திருப்பூர், தாய்த்தமிழ்ப்பள்ளி – 20 ஆம் ஆண்டு விழா
பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015