மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு: 1/ 2 : தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து – நூல்களின் பங்கு 1/ 2   “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு”             (குறள் 783)   நூல்களைப் படிப்பவர்களுக்கு,    அதிலுள்ள நற்பொருள்கள் சிறுகச் சிறுக விளங்குவதுபோலப், பண்புள்ளவர்களுடன் செய்துகொள்ளும் நட்பு, அவருடன் பழகப்பழக இன்பம் அளிக்கும்.   நூல் ஒரு சிறந்த நண்பன், சிறந்த ஆசிரியர், சிறந்த அமைச்சரைப்போல் அறிவுரை கூறி வழிகாட்டும். நூல் என்பது சிறந்த இலக்கிய நூல்களை மட்டும் சுட்டவில்லை. இறைநெறி நூல்கள், வரலாற்று நூல்கள், உளவியல், தத்துவம், புதின நூல்கள்,…

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று : தி.வே.விசயலட்சுமி

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று   நம் குமுகாயச் சூழலில் ஒரு நிறைவான வாழ்வு வாழ அனைவர்க்கும் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியை முறையாக, ஆழமாகப், பல அல்லல்கட்கிடையே (பெற்றோரை வருத்தி, அவர்கள் தேவையைக் குறைத்து) 4, 5 பட்டங்கள் பெற்றாலும், நாட்டில் வேலை கிடைப்பது எளிதான ஒன்றல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண்மணி தன் அணிகலன்களை விற்று, இருவேளை உணவை ஒரு வேளையாகக் குறைத்துத் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். படிப்புக்கேற்ற வேலை மகனுக்குக் கிடைக்கவில்லை. என்னிடம் தன் பெரிய…

அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! – தி.வே.விசயலட்சுமி

அறிவியலாளர்கட்கு அறைகூவல்! விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளவேண்டா! ‘எங்கள் ஊரில் விண்ணுக்குப் ‘பறக்கும் விலைவாசி ஏற்றத்தை இந்த மண்ணுக்குக் கொண்டுவர ஏதேனும் வழிமுறைகள் சொல்லுங்கள்! இல்லையெனில் உங்கள் அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! தி.வே.விசயலட்சுமி