மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 தொடர்ச்சி   பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். “இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?” “நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?” “மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்.” “மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 “என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமேஉன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்தபின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்குமுன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!” ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி கமலா – அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் – மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக ‘கமலா’ என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி   “அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?” அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன. “இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3   “ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின்ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்வீடுகின்றன என்செய்வோம் இனி அவ்வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே”      -நற்றிணை விளக்கம் துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. “தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 தொடர்ச்சி   அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். ‘பிராவிடண்டு பண்டு’ பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு ‘வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக’த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 2 “தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீகல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீஅறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீஅனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ”      -பரிபாடல் குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5

 (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள். “ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?”மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4.

 (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய், சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய தொடர்வண்டி…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி “அப்பா போய்விட்டார்” என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். “நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்” என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2.

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 1. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்மெல்லப் போனதுவே! பேரண்டப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத (உ)ரோசாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 1. முன்னுரை

குறிஞ்சி மலர் முன்னுரை என்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் புதினத்தை(நாவலை) எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்தப் புதினத்திற்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். ‘இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது‘ என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள். சிறந்த…