மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் அறிவொளி ஏற்றுவிழா

  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா   தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக  சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 210 2016 அன்று நடை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒளியேற்று விழா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   ஒளி…

கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது – காவல் ஆய்வாளர் அறிவுரை

கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை    தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர்  கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார்.   விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார்  இரமேசு சிறப்புரையில், “சிறு…

பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள்!

பெற்றோர்களிடம் சொல்லி 100% வாக்களிக்கச் செய்யுங்கள் வட்டாட்சியர் பேச்சு தேவகோட்டை: – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 100  விழுக்காடு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு வண்ணக்கோலப் போட்டி நடை பெற்றது.   விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு, வருவாய் ஆய்வாளர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேசுவரி தலைமை தாங்கிப் பேசுகையில், நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடமும், உங்கள் வீட்டருகே உள்ள அனைவரிடமும் சொல்லி  வாக்களிக்கச் …

மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா ?

கண்ணாடியைத் தின்னும் வித்தை எப்படி ? மந்திரமா? தந்திரமா ? அறிவியல் நிகழ்ச்சியில் சுவையான நிகழ்வுகள்! காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி? அறிவியல் உண்மை விளக்கம் தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ‘அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி!’ வாயிலாகப் பள்ளி மாணவர்களுக்கு  அறிவியல்  வித்தைக்காட்சியும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கினார் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர்…

வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்க!

இளம் மாணவர்கள் வேளாண்மைப் படிப்பில் சேருவதைக் குறிகோளாக வைத்துக் கொள்ள வேண்டும் வேளாண்மைக் கல்லூரி தலைமையர்(டீன்) பேச்சு   நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேளாண்மைக் கல்லூரியில் ஒரு நாள் ( 18/03/2016)    தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர்   மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாகச் சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரிக்குச் சென்றனர்.         1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வேளாண்மைக் கல்லூரிக்குக் களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லூரி வணிகப் பிரிவு மேலாளர்…

தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.   முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   கண்ணங்குடி அரசு தொடக்க நல்வாழ்வு நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கூறினார்கள்.   மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட…

தேவகோட்டை மாணிக்கவாசகர் பள்ளியில் தேசியக் குடற்புழு நீக்க நாள்

தேசியக் குடற்புழு நீக்க  நாள்(பிப்.10) பள்ளியில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா   தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு  நல்வாழ்வுத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும்  தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர்  சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மத்திய அரசு சார்பில் தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு   நல்வாழ்வுத்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு  இரத்த சோகை ஏற்படுவதைத்…

தேவாரம் ஒப்பித்தல் போட்டி: வென்றவர்களுக்குப் பாராட்டு விழா

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியில் தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில்  6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள  பிரிவில்  8 ஆம் வகுப்பு  மாணவி  இராசேசுவரி    முதல்  பரிசையும், 7 ஆம் வகுப்பு மாணவி  தனலெட்சுமி,  6 ஆம் வகுப்பு   மாணவர் இரஞ்சித்து  ஆகிய…

சிறுவர்கள் செய்தார்கள்! வென்றார்கள்!

செய்தார்கள்! வென்றார்கள்!  சுட்டி விகடன்  கவின்கலைச் சான்றிதழ்களைப் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வழங்கிப் பாராட்டுதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2015- திசம்பர்   மாதம் நடைபெற்ற  கவின்கலை(FA) செயல் திட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சுட்டி விகடனின் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய…

தேசிய இளைஞர் நாள் விழா, தேவகோட்டை

தேசிய இளைஞர் நாள் விழா பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு.   தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் முதல் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் முதலிடம்  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. இதனில் பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முதல் வகுப்பு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.    விழாவிற்கு வந்தவர்களை மாணவி சுமித்ரா…

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம்

காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம்   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்தியக் காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான திங்கள் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது.    முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ . சொக்கலிங்கம் வரவேற்றார். காப்புறுதிக்கழகத்தின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். காப்புறுதிக்கழகத்தின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் ஆய்வுசெய்தனர். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து அவற்றை…