இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும் 1.
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி) 10. பழந்தமிழும் தமிழரும் மக்களைப் பிரிவுபடுத்துகின்றவற்றுள் மொழியே பிறப்பொடு வந்து இறப்பொடு செல்வதாகும். ஏனைச் சமயமும் சாதியும் நிறமும் பொருள் நிலையும் பதவியும் இடையில் மாற்றத்திற்குரியன. உலகில் உள்ள மக்கட் கூட்டத்தினருள் பெரும் பகுதியினர் மொழியாலேயே வேறு படுத்தப்பட்டு அழைக்கப்படுகின்றனர். மொழியால் மக்களினம் பெயர் பெற்றதா? மக்களினத்தால் மொழி பெயர் பெற்றதா? எனின், தமிழர்களைப் பொறுத்தவரை மொழியால்தான் மக்களினம் பெயர் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்குரியவர் ஆதலின் தமிழர் எனப்பட்டனர். தமிழ் என்றாலும் தமிழர் என்ற…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ் தொடர்ச்சி ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714) மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை…
புலவர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள். தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும். ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம். சங்கக்காலத்தைக் கி.மு….
தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 24 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25 13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி) பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில், “அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய்…
இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 15 7. இல்லறம் ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும். இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும். மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு. மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது. நாளாக நாளாக அறிவு…
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்
(திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 6.0.விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம் அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர், விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. [தொல்.செய்.540] என்னும் நூற்பாவழி நுவல்கிறார். இரவானாலும் பகலானாலும் புதியவர்கள் இல்லத்திற்குப் பசியோடு வரும்…
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 2 முன்னுரை ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில், ‘மாவு மாக்களு மையறி வினவே.’ ‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’ என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும். இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு…
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 முன்னுரை `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம். தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…
அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே! – இலக்குவனார் திருவள்ளுவன்
அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே! அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும் ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே. இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல…
தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? நிலவளத்தையும் மக்களின் பொருள் வளத்தையும் சுரண்டிப்பிழைக்கும் சாமியார் ஒருவர், சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லியுள்ளார். தமிழ் தெரியாத மாந்தருக்கே தமிழ்நாட்டில் இடம் இல்லை என்னும்பொழுது தமிழ் தெரியாத அவரின் சிவனுக்கு இங்கு என்ன வேலை? அவருடைய சிவனுக்கே இங்கே இடமில்லாத பொழுது அவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சிவ வழிபாட்டைப் பழமையானதாகச் சிலர் கூறி வந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இல்லை. “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்…
தொல்காப்பியர் மன்றத்தின் திங்கள் கருத்தரங்கம், கனடா
மாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017 முற்பகல் 9.30 தொல்காப்பியர் மன்றம், கனடா
ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன். 60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும். அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை. வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்…