தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (6) பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்: இயம், இசம், இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்? தாராளியம் என்பது எப்படி அமைப்பையும், தத்துவத்தையும் குறிக்கிறது? என்பதை விளக்கப்படுத்துங்கள். இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும். இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது…

தோழர் தியாகு எழுதுகிறார் 45: பெரியாரா? பிரபாகரனா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 44 தொடர்ச்சி) பெரியாரா? பிரபாகரனா? தாழி 20, 21 மடல்கள் குறித்து அன்பர் மா. சத்தியசீலன் எழுப்பியுள்ள வினாக்களை இம்மடலில் எடுத்துக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைப் பற்றிய ‘தீரன் திண்ணியன் தேசத் தலைவன்’, தமிழீழ மாவீரர் நாள் பற்றிய ‘மாவீரர்களின் பெயரால்’ ஆகிய கட்டுரைகளையே சத்தியசீலன் குறிப்பிடுகின்றார். முதலாவது கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பிராபகரனை நான் எப்படிப் பார்க்கிறேன்? அவரது வரலாற்று வகிபாகம் பற்றிய என் புரிதல் என்ன?…

தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)

 (தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (5) தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்: குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா? ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும். இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம். நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 43: சொல்லடிப்போம் வாங்க! (4)

(தோழர் தியாகு எழுதுகிறார் 42 தொடர்ச்சி சொல்லடிப்போம் வாங்க! (4) இனிய அன்பர்களே! பெங்களூருவிலிருந்து எழுதுகிறேன். விடியுமுன் வந்து சேர்ந்து விட்டேன். இன்று (04.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 18, ஞாயிறு) மாலை கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் நடத்தும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வில் பேசுவதற்காக வந்துள்ளேன். விழா நடக்கும் இடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம். அழகிய அல்சூர் ஏரிக்கரையில் தமிழ்ச் சங்க வாயிலில் பொன்னிறச் சிலை வடிவில் திருவள்ளுவர் அமர்ந்துள்ளார். கன்னட இன வெறியர்களின் எதிர்ப்பால் பல காலம் சாக்குச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிலைதான் இது. இந்தச் சிலையைத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 42: சொல்லடிப்போம் வாங்க! (3)

(தோழர் தியாகு எழுதுகிறார் 41 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (3)      தாராளியமா? தாராளவியமா? தாழி அன்பர் ‘சிபி’ எழுதுகிறார்: தாரளம்+இயம் என்பதில் மகரவீற்று கெட்டப்பின்னர் தாராளவியம் தானே வரும். தாரள+இயம் என நிற்கும் போது உடம்படுமெய் விதியைத் தான் பொருத்தமுடியும். ள+இ என்பதில் அகரம் கெட்டாலொழிய ள்+இ என நிற்காது. அகரம் கெடும் விதி இதற்குப் பொருந்துமா? மேலும் தாராளவியம் என்பதே இயல்பான பலுக்கலாக உள்ளது. ************************* சிபி சொல்லும் தமிழ் இலக்கணத்தில் எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அது என் குறை. எனவே தமிழறிஞர்களின் கருத்தறிய விரும்புகிறேன்….

தோழர் தியாகு எழுதுகிறார் 41: சொல்லடிப்போம் வாங்க! (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் 40 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (2) நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கல் குறித்து மேலும் சில பார்வைகள்: தாராளியம் என்ற சொல்லாக்கம் குறித்து அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்: புது + ஆண்டு = புத்தாண்டு. ஏனெனில் புத் என்பது முன்னொட்டு. ஆனால் பொது + ஆண்டு பொத்தாண்டு என வராது. தாராளம் என்பது தள் → தரு → தார்+ஆளம் = தாராளம். எனவே, இந்த இடத்தில் ஆளம் என்பதைப் பிரித்து ஆள் + இயம் என்பது இடராக உள்ளது. எனினும் தாளியம் என்னும் சொல்லோசைக்கிணங்க இருப்பதால் தாராளியம் என்பதைப் பயன்படுத்தி…

தோழர் தியாகு எழுதுகிறார் 40: சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 39 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4 கீழ்ச்சாதிக்காரன் தரத்தைக் கெடுத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் இந்த மேல்சாதிக்  கூட்டத்துக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்: இடஒதுக்கீடு என்பது ஒரு கல்விக் கழகத்தில்  நுழைவதற்குக் கோரப்படுகிறதே தவிர  இறுதியில் பட்டம் பெற்று வெளியே வருவதற்கு அல்ல. அதாவது இடஒதுக்கீடு சேர்க்கையில்தானே  தவிர தேர்ச்சியில் அல்ல. தேர்ச்சிக்கான படித்தரங்கள் எல்லார்க்கும் ஒன்றுதான்.  ‘இந்து‘ வின் சாதியம் பிராமணியத்தின் தகுதி-திறமைவாதமும் சாதிக் குருட்டுச் சாதியமும் எவ்வளவு விபரீதமான வாதங்களுக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு ஆங்கில நாளேடு ‘இந்து’ வின் ஏப்பிரல் 2 ஆசிரியவுரையே…

தோழர் தியாகு எழுதுகிறார் 39 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3

(தோழர் தியாகு எழுதுகிறார் 38 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3 இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (IIT), இந்திய மேலாண்மைப் பயிலகம் (IIM), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் (AIIMS) என்ற வகையிலான கல்வி நிறுவனங்களில் ஒன்றே ஒன்றிலாவது ஏனைய பிற்படுத்தப்பட்டோர் அவர்களின் மக்கள் தொகைக்குரிய விழுக்காட்டை நெருங்கியிருப்பதாகக் காட்ட முடியுமா?  இந்த உயர்கல்விப் பயிலகங்களில் ஒன்றே ஒன்றின் நிருவாகத்திடமிருந்தாவது அதன் ஆசிரியர்கள் -மாணவர்களின் வகுப்புவாரிக் கணக்கைக் கேட்டுப் பெற முயன்றார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்?  வழக்கில் வந்து சேர்ந்து கொண்ட பேராசிரியர் பி.வி இந்திரேசன் போன்றவர்களிடம் ‘ஐ.ஐ.டி.யில்  பிராமணர்கள் எத்தனை?…

தோழர் தியாகு எழுதுகிறார் 38 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? . 2

(தோழர் தியாகு எழுதுகிறார் 37 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? 2 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  இந்திய அரசு நடத்தும் மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கெதிராகத் தொடரப்பட்ட நீதிப் பேராணை (ரிட்) வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் உசாவலுக்கும் தீர்ப்புக்கும் காத்துள்ளது. இந்நிலையில் மேற்படிச் சட்டத்தின் 6ஆம் பிரிவை நிறுத்தி வைக்கும்படி அரிஜித் பசயத், லோகேசுவர் சிங் பந்தா ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் (‘பெஞ்சு’) சென்ற மார்ச்சு 29ஆம் நாள் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பல செய்நுட்பக் கேள்விகள்…

தோழர் தியாகு எழுதுகிறார் 37 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 36 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துப் போரில் சமூக நீதிக் கட்சியாராகிய நம் பங்கு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டும். அது தொடர்பாக சமூகநீதி மறுப்பாளர்கள் நடத்தும் பலமுனைத் தாக்குதலை முறியடிக்கும் கருத்துப் படைக்கலன்கள் நம் கொட்டிலில் அணியமாய் இருக்க வேண்டும். அந்த முறையில் கடந்த காலத்தில்  (தமிழ்த் தேசம் 2007 சித்திரை இதழில்) எழுதப்பட்டதென்றாலும் இன்றளவும் பொருத்தப்பாடுள்ள ஒரு கட்டுரையை இம்மடலில் மீள் வெளியீடு செய்கிறோம். பயன் பெறுங்கள், நம் உறவுகள் பயன்பெறச் செய்யுங்கள்….

தோழர் தியாகு எழுதுகிறார் 36 : சொல்லடிப்போம், வாங்க!

 (தோழர் தியாகு எழுதுகிறார் 35 தொடர்ச்சி) சொல்லடிப்போம், வாங்க! கலைச் சொல்லாக்கம் என்பது அறிவியல் கல்விக்கு இன்றிய மையாதது. இயற்கை அறிவியல் ஆனாலும் குமுக அறிவியல் ஆனாலும் கலைச் சொற்களைத் தவிர்த்துப் பயிலவோ பாடம் சொல்லவோ முடியாது. ஒவ்வொரு மொழியும் அடிப்படையான ஒரு சொற்களஞ்சியத்தைக் கொண்டு இயங்குகிறது. சொற்களஞ்சியத்தின் செழுமை மொழிவளத்தைப் புலப்படுத்தும். ஆனால் எவ்வளவுதான் வளம்பொருந்திய மொழி என்றாலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கப் புதிய சொற்கள் வார்க்க வேண்டிய தேவை எழுந்தே தீரும். அப்படிச் செய்யும் போது அந்தந்த மொழிக்கும் உரிய…

தோழர் தியாகு எழுதுகிறார்  35 : நீண்ட வழி போக வேண்டுமம்மா!

(தோழர் தியாகு எழுதுகிறார் 34 தொடர்ச்சி) “The woods are lovely, dark and deep But I have promises to keep, And miles to go before I sleep.”   இப்படி எழுதியவர் அமெரிக்கப் பாவலர் இராபருட்டு (Robert Frost). இந்த வரிகளைத் தன் படிப்பு மேசையில் எழுதி வைத்து நமக்கெல்லாம் தெரிய வைத்தவர் பண்டித சவகர்லால் நேரு. தமிழில் இப்படிச் சொல்லலாமா? “கானகங்கள் அழகானவை, அடர்ந்து இருண்டு ஆழ்ந்து செல்பவை ஆனால் யான் காப்பாற்ற வேண்டிய உறுதிகள் உள,…