தோழர் தியாகு எழுதுகிறார் 63
(தோழர் தியாகு எழுதுகிறார் 62 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: 1. இந்திய மாறுதலுக்கான தேசிய நிறுவனத்தின் (NITI) பரிந்துரை வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் அல்லாத பிற துறைகளின் தொழிலாளர்கள் போன்ற பிற நலிந்த பிரிவினரையும் உள்ளடக்கித் தலைமை யமைச்சர்,உழவர் திட்டத்தை அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டமாக மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும், பின்னர் பிற மானியங்களையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும் இ.மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து பரிந்துரைத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதும் போதாக் குறையானது. ஆண்டிற்கு 6,000 உரூபாய் / மாதத்திற்கு 500 உரூபாயை அடிப்படை வருமானம் என்று குறிப்பிடுவது தகுமா? அதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம் என்று கருதினால் அஃது ஓர் இழிய நகைச்சுவையாகவே, கேலிக் கூத்தாகவே இருக்கும். இத்தகைய அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டத்துடன் பிற நல்கைகளையும் இணைத்துக் கொள்ளலாம் எனும் போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. உணவு மானியத்திற்கும், பொது வழங்கல் முறையில் உணவு தானியங்கள் வழங்கும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 62
(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி) தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல் பாராட்டே அவமானம்? இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது. அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 61
(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார் பொருளியல்: 1. தொழிலாளர் உரிமைக் குரல் Ø இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு. இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான 10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி,…
தோழர் தியாகு எழுதுகிறார் 60
(தோழர் தியாகு எழுதுகிறார் 59 தொடர்ச்சி) அன்பர் டி. சீனிவாசன் எழுதுகிறார்: தாழி மடலுக்கு மிக்க நன்றி ஐயா. அவற்றை ஒரு வலைப்பதிவில் பதிவு செய்து வருமாறு வேண்டுகிறேன். பெரும் பெட்டகமாக இருக்கும். நுட்ப உதவிகள் வேண்டுமெனில் செய்து தர இயலும். உங்கள் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் படைப்புப் பொது உரிமையில் (கிரியேட்டிவ் காமன்சு உரிமையில்) பகிர்ந்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பெயரிலேயே அன்பு வைத்துள்ள அன்பர் அன்பரசு மாரி எழுதுகிறார்: தங்களது தாழி மடல் கிடைக்கப்பெற்றேன்… மிக்க மகிழ்ச்சி! தங்களது பணி தொடர…
தோழர் தியாகு எழுதுகிறார் 59
(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி) தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது: ___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___ “இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 58: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! – நலங்கிள்ளி
(தோழர் தியாகு எழுதுகிறார் 57 தொடர்ச்சி) நலங்கிள்ளி எழுதுகிறார்: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! தோழர் தியாகு “தாழி மடல்” என்னும் இதழை மின்ம அஞ்சல் வழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தி வருகிறார். தியாகு எழுதுவது அனைத்தும் அறிவுச் சுரங்கத்தைச் சளைக்காமல் தேடும் பணியே! அதனைத் “தாழி மடல்” மீண்டும் மெய்ப்பித்துள்ளது. தாழி மடல் வாசகர்கள் தோழர் தியாகுவிடம் அவர் எழுதும் எழுத்துகள் குறித்து வினாத் தொடுக்கலாம். வினாக்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் விடையிறுக்கப்படும். தாழி மடலைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு…
தோழர் தியாகு எழுதுகிறார் 57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா
(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: பொருளியல்: வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி… பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது. அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது. ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம…
தோழர் தியாகு எழுதுகிறார் 56 : சிறையச்சம் வெல்வோம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 55 தொடர்ச்சி) சிறையச்சம் வெல்வோம்! புயல் மழைச் சேதம் பற்றிய என் வினவலுக்கு விடையாகத் தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்: எனது மகன் கவின்அமுதன் சென்னையில் பாதுகாப்பாக இருக்கிறார். உசாவிக் கேட்டறிந்தேன். இம்மடலில் தாழி என்பதை முடக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தாழியில் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ‘தாழி’ வீட்டுச்சிறை என்ற பொருளையும் தருகிறது.நல்லது அன்பரே! தாழி, சிறை என்றும் பொருள் தருமானால் மகிழ்ச்சி. அது என் தாய்வீடு. அங்குதான் நான் நானாகப் பிறந்தேன். சிறை என்பது மதில்சூழ்…
தோழர் தியாகு எழுதுகிறார் 55: இரோசிமா-நாகசாகி
(தோழர் தியாகு எழுதுகிறார் 54 தொடர்ச்சி) இரோசிமா- நாகசாகி:மாந்தக் குலம் மறக்கலாகாத பேரழிவுப் பெருஞ்சான்றுகள் ஒரு கற்பனை! கற்பனைதான்! உக்குரைன் போரில் வல்லரசியக் கனவுகள் கலைந்து போன நிலையில் உருசிய அதிபர் புதின் தன் அச்சுறுத்தலைச் செயலாக்கினால்… எண்ணிப் பார்க்க முடியாத பேரழிவு நேரிடும் என்பதில் ஐயமில்லை. உருசிய உக்குரைன் போரை நாம் எதிர்க்க ஒரு முகன்மையான காரணம் அது அணுவாய்தப் போராக முற்றும் ஆபத்து உள்ளது என்பதாகும். உருசியா உக்குரைன் மீது அணுவாய்தப் போர் தொடுத்தால், எவ்வளவு சிறிய அளவில் தொடுத்தாலும், எந்தச்…
தோழர் தியாகு எழுதுகிறார் 54 : சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!
(தோழர் தியாகு எழுதுகிறார் 53 தொடர்ச்சி) சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை! தாழி அன்பர் சிபி எழுதியதை சென்ற மடலில் கண்டோம்.“நீங்கள் அவ்வாறு கூறவில்லை, சத்தியசீலன் அவ்வாறு கூறியுள்ளார்” என்கிறார் சிபி. அவ்வாறு என்றால் எவ்வாறு?“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.” (தாழி மடல் 33.)ஏற்புடையதல்லாத இந்தக் கூற்று என்னுடையதன்று என்பதை சிபி ஏற்றுக் கொள்கிறார். நல்லது, நான் விடுவிக்கப்பட்ட வரை மகிழ்ச்சி. நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் வருந்துகிறேன்.அப்படியானால் சத்தியசீலன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 53: 2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு
(தோழர் தியாகு எழுதுகிறார் 52 தொடர்ச்சி) தோழர் சமந்தா எழுதுகிறார்:2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு • ஒவ்வோராண்டும், மிகச் சிறந்த, புதுமையான மார்க்குசிய நூலுக்குத் துய்ச்சர் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான துய்ச்சர் நினைவுப் பரிசு கேபிரியல் வினண்டு எழுதிய “அடுத்த மாற்றம்: துருவேறிய அமெரிக்கப் புறநகரில் தொழிற்சாலையின் வீழ்ச்சியும், சுகாதாரப் பராமரிப்பின் எழுச்சியும்” (The Fall of Industry and the Rise of Health Care in Rust Belt America) என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்ரியல் வினன்ட்…
தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)
(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (7) அன்பர் சிபி எழுதுகின்றார்:ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன். சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது…
