தோழர் தியாகு எழுதுகிறார் 76 : மொழியும் மொழிவழித் தேசியமும்
தோழர் தியாகு எழுதுகிறார் 75 தொடர்ச்சி வரலாற்றில் மொழியும் மொழிவழித் தேசியமும் [வருக்கம் என்ற சொல்லுக்குப் பழகியவர்கள் கீழே நான் வகுப்பு என்று சொல்வதை வருக்கம் என்று புரிந்து கொள்ள வேண்டுகிறேன். வருக்கப் போராட்டம் என்பதையே வகுப்புப் போராட்டம் என்கிறேன்.] “தேசிய இனங்களின் தன்-தீர்வுரிமை” என்ற தலைப்பில் இலெனின் எழுதிய நூலிலிருந்து ஒரு நீண்ட மேற்கோளை அன்பர் கதிரவன் திரைப்பிடியாக எடுத்து அனுப்பியிருந்தார். இந்த மேற்கோளின் கருத்தை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நூல் எப்பொருள் குறித்தானது? குறிப்பிட்ட மேற்கோளின் இடம்பொருள்ஏவல் என்ன? அதன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 75: அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக
(தோழர் தியாகு எழுதுகிறார் 74 தொடர்ச்சி) அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக அண்ணல் அம்பேத்துகர் இந்திய நாடாளுமன்றம் முதல் கடைக்கோடிக் குப்பம் வரை சிலைகளாக நிற்கிறார். அவருடைய பிறந்த நாளும் நினைவு நாளும் நாடெங்கும் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒடுக்குண்ட மக்கள், உழைக்கும் மக்கள் அவரைத் தங்கள் காவல்தெய்வமாகப் போற்றுகின்றார்கள். ஆளும்வகுப்புக் கட்சிகள் அவரை அரசமைப்புச் சட்டச் சிற்பியாகப் புகழ்கின்றன. அவரது படத்தைக் காட்டித் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் கட்சிகளும் உண்டு. நாட்டையாளும் இந்துத்துவக் கும்பல் அம்பேத்துகரைக் களவாடப் புதுப்புது மோடி வித்தைகள் காட்டி வருகிறது. இந்தக் களவாடலின்…
தோழர் தியாகு எழுதுகிறார் 74: நமக்கொரு 47 (!?)
(தோழர் தியாகு எழுதுகிறார் 73 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இது 47ஆம் தாழி மடல். 47! பெயர் போலவே எண்ணும் ஓர் அருவக் குறியீடு. பருப்பொருளின் இருத்தல் வடிவங்களில் ஒன்று. பொருண்மைக்கு அப்பால் அதற்கொரு பொருள் இல்லை. இது இராசி எண், இது இராசியில்லாத எண் என்பதெல்லாம் மூடத்தனம். 100 என்ற எண் அகவையைக் குறிக்கும் போது முதுமையைக் குறிப்பதால் மருளச் செய்கிறது. மதிப்பெண்ணைக் குறிக்கும் போது வெற்றியைக் குறிப்பதால் மகிழச் செய்கிறது. 47 என்ற எண் ஆண்டைக் குறிக்கும் போது 1947! வரலாற்றில் முக்கிய ஆண்டுகளில் ஒன்று! இரவில் வாங்கினோம் விடியவே இல்லை என்ற நறுக்குக்கு இலக்கான இந்திய விடுமையைக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 73
(தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு தொடர்ச்சி) அன்பர் கதிரவன் தாழி மடல் 45இல் இரு செய்திகளை முன்வைத்து விளக்கம் கோரியிருந்தார்: 1. வியத்துநாம் வரலாறு தொடர்பான ஒரு செய்தி; 2. தேசங்களின் தன்-தீர்வுரிமை தொடர்பாக இலெனினிடமிருந்து ஒரு நீண்ட மேற்கோள். வியத்துநாமைப் பொறுத்த வரை இந்தோ- சீனா(INDO – CHINA) என்ற ஏட்டின் 1970 சூன் இதழின் படப் படி ஒன்றை அன்பர் கதிரவன் அனுப்பியுள்ளார். கருத்துக்குரிய வரலாற்றுச் செய்திகள் அதில் காணக் கிடைக்கின்றன. அவர் நேற்று அனுப்பியதோடு சேர்த்து இதையும் நாம் பிறகு எடுத்துக் கொள்வோம். இப்போது…
தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு
(தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு – தொடர்ச்சி) நலங்கிள்ளியின் பின்னூட்டம் மெல்ல, இல்லை, விரைந்து தமிழினிச் சாகும்? தமிங்கில விளம்பரம்பற்றி, தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதுவது பற்றி உங்களின் பதிவு கண்டேன். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை. இன்னும் 15 ஆண்டில் நாம் அடிக்கும் துண்டறிக்கைகளையும் இந்தப் பாணியில் அடித்தாக வேணடும். இது நடக்கப் போவது உறுதி. இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பகிரியில்(வாட்சப்பில்) தட்டச்சு செய்து மாறி மாறி உரையாடிக் கொள்வதைப் பாருங்கள். முழுக்க ஒலிபெயர்ப்புதான். அண்மையில் கல்லூரி மாணவர்கள் பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளக் காண்கிறோம். அவர்கள் எழுதி…
தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு
(தோழர் தியாகு எழுதுகிறார் 70 தொடர்ச்சி) இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு (BASIC STRUCTURE OF THE INDIAN CONSTITUTION) என்றால் என்ன? பொ,ந.பி [EWS] தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய இரு நீதியரில் ஒருவரான இரவீந்திர பட்டு எழுதிய தீர்ப்புரையைத் தமிழாக்கம் செய்து வருகிறேன். அதன் மூன்று பகுதிகளைச் சட்டத் தெளிவு கருதியும் தமிழாக்கம் கருதியும் முன்பு தாழி மடல்களில் (37, 38, 40) பகிர்ந்திருந்தேன், இதோ இன்னும் சில பகுதிகள் (தமிழிலும் ஆங்கிலத்திலும்): [எம். நாகராசு வழக்குத் தீர்ப்பிலிருந்து சில எடுகோள்கள்:]…
தோழர் தியாகு எழுதுகிறார் 70 : வானுயர்ந்த கனவுகள்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 69 தொடர்ச்சி) வானுயர்ந்த கனவுகள்! இனிய அன்பர்களே! காரிக் கிழமை தோறும் ‘இந்து’ போன்ற பெரிய நாளேடுகள் நிலைச் சொத்து [ரியல் எசுடேட்டு] விளம்பரங்களால் நிறைந்து வழிகின்றன. வீட்டு மனைகள், அடுக்ககங்கள் விற்பனைக்கான முழுப்பக்கப் பலவண்ண விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும், (உங்களிடமிருந்தால்) காசையும் கூடக் கவரும் படியாக வருகின்றன. அவற்றை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பார்த்து என்னவாகப் போகிறது? சில நேரம் புதுப்புது எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும்: “சார், அருமையான லொக்கேசன், உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும், ஒரு முறை…
தோழர் தியாகு எழுதுகிறார் 68 : தமிழீழத் தோழமை
(தோழர் தியாகு எழுதுகிறார் 67 தொடர்ச்சி) தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை தமிழ்நாட்டில் தமிழீழத் தோழமை இயக்கம் சற்றே நலிவுற்ற நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கான முகன்மைக் காரணங்களில் ஒன்று: தமிழ்த் தேசியம் – எதிர் – திராவிடம் எனும் கருத்தியல் பிணக்காகும். இது பல நேரம் கருத்தியல் விவாதம் என்ற எல்லையைக் கடந்து கசப்பான சொற்போராகவும் மாறிவிடக் காண்கிறோம். தமிழக அரசியல் ஆற்றல்கள் தமிழக, இந்திய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழத் தோழமைக் கொள்கையில் ஒன்றுபட்டுப் போராடுவது நமக்கொன்றும் புதிதன்று. 1990ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் திலீபன் மன்றம் நிறுவிய போது “ஈழத் தமிழர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 67 : ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 66 தொடர்ச்சி) ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம் [பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீடு பற்றிய நீதியர் இரவீந்திர பட்டு(Ravindra Bhat) தீர்ப்பின் ஒரு பத்தியைத் தாழி 37ஆம் மடலிலும் இன்னொரு பத்தியை 38ஆம் மடலிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தேன். மண்டல் தீர்ப்பு என்று பெயர் பெற்ற இந்திரா சாகுனி(Indra Sawhney) தீர்ப்பின் முகன்மைக் கூறுகளை இரவீந்திர பட்டு தமது தீர்ப்புரையில் சுருக்கித் தொகுத்துக் கொடுத்துள்ளார். சட்ட அறிவிலும் தமிழாக்கப் பயிற்சியிலும் அக்கறையுள்ள அன்பர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் அந்தத் தொகுப்பை இதோ படைக்கிறேன்:- இட ஒதுக்கீடுகள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 66 : மகிழன் வேண்டுகோள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 65 தொடர்ச்சி) தோழர் மகிழன் வேண்டுகோள்: கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்! இனிய அன்பர்களே! வணக்கம். இது தாழி மடல் – 40. நமக்கு ஒரு நாளிதழ் வேண்டும் என்று சொல்லி அதன் முன்னோடியாகத்தான் தோழர் தியாகு இம்முயற்சியைத் தொடங்கினார். அவரது உழைப்பாலும் உங்களின் ஒத்துழைப்பாலும் தாழி தொடர்ந்து மலர்கிறது. எவ்வளவு இடர்ப்படினும் நாள் தவறாமல் தாழி மடல் உங்கள் கைக்கு வரும் என்பதில் ஐயம் வேண்டா. தாழி மடலின் முகன்மை எழுத்துகளை அச்சிலேற்றி நூல்வடிவாக்க வேண்டும் என்ற முன்மொழிவும் உள்ளது. இதே போல்தான் ஈராண்டுக்கு மேலாக “தமிழ்நாடு இனி” இணைய வழி…
தோழர் தியாகு எழுதுகிறார் 65
(தோழர் தியாகு எழுதுகிறார் 64 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 65 இனிய அன்பர்களே! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நேற்று திறந்த மடல் எழுதினேன். அவர் உடனே விடையனுப்பினார்: “உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை அண்ணல் அம்பேத்துகருக்குச் செய்த துரோகம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சார்ந்திருக்கும் தமு எகச இது குறித்து விரிவான அறிக்கை அப்போதே வெளியிட்டிருக்கிறோம் தோழரே. தங்கள் மடலுக்கு நன்றி.“ அவருக்கு நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். தமுஎகச அறிக்கையை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன். “தேடி அனுப்புகிறேன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 64
(தோழர் தியாகு எழுதுகிறார் 63 தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 64 பொநபி (EWS) வழக்கில் எழுதிய தீர்ப்புரையின் முதல் பத்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிர்ந்திருந்தேன். தமிழாக்கம் தொடர்பாகக் கேட்கப்பட்ட விளக்கங்களும் தந்துள்ளேன். அதே தீர்ப்புரையின் இன்னொரு பகுதியில்… இட ஒதுக்கீடு தொடர்பான பழைய வழக்கு ஒன்றில் பெரும்பான்மையுடன் மாறுபட்டு நீதியர் சுப்பா ராவு அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியைப் பட்டு எடுத்துக் காட்டுகிறார். அதையும் ஈண்டு தமிழாக்கத்துடன் பகிர்கிறேன்: “ Article 14 lays down the general rule of equality. Article 16 is an instance of the application of the general rule with special reference to…
