ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! – ஊர்திப்பேரணி

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி!   செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை  ஊர்திப்பேரணி! 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்… விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்… ப.சீ.ந.த.ச. (‘தடா’) சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் ப.சீ.ந.த.ச.(தடா) ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ்த் தண்டித்த முரண்… ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல்…

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.   ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது.   ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…

எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி

ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது! – நளினி வேதனை      “சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்” என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.   முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி…

எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?

   இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார்,  இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா  விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார்.   உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும்  வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள்  எவையாயிருப்பினும்…

தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை

  தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று  போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான்  அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர்  வேறு எங்கும் சொந்த   வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…