தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில் புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச் செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச் செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள் செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் ! (7) தென்றமிழில், வடமொழியின் சொற்கள் வந்து திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே அழிவழக்குப்…
தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது 1-3 தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 4-6 எழுச்சியும் ஆர்வத் தீயும் என்னுளே எழுந்து பொர்ங்கக் கிளர்ச்சிசெய் வாரைக் கூடிக் கிடந்திடும் அந்தப் போதில் தளர்ச்சிநான் உற்றே னென்றால் தனிவியப் படைவீர், அந்த வளர்ச்சியின் நிலையைக் கண்டால் வடிந்திடும் கண்ணி ரன்றே ! தமிழினை வளர்ப்போ மென்றும் தமிழர்நா டடைவோ மென்றும் அமிழ்தென மொழிவோ ரெல்லாம் அவரவர் கொள்கை கொண்டு சுமைசுமை யாகத் தீமை தோற்றுவித் திடுதல் கண்டேன். அமைந்திடும் தமிழர் நாட்டுக் கவர்பணி வேண்டாம்! வேண்டாம் ! சொல்லழகு மனம்பறிக்கப் புலவன்…
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்
(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி) இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. செல்லப் பாட்டி வெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும்,…
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – நாரா.நாச்சியப்பன்
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. முன்னுரை என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன். இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப்பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள். நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை…
தமிழ்த்தாய் வணக்கம் 21-23 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 16-20 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 21-23 பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீறா துறாரே தெளிவு (21) நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் – புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. (22) அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே றொன்றும் கொளாதென் உளம். (23) –பாவலர்…
தமிழ்த்தாய் வணக்கம் 16-20 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 16-20 பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழன்று! (16) எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை. (17) பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18) எங்கும் தமிழாய்…
தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால் புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில் அமிழுந் துயரை அகற்று. (11) பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத் தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச் சிந்தை செலுத்து சிறிது. (12) அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப் பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால் ஆடுகின்ற தென்றன் அகம். (13) தென்னகத்தைச் சேர்ந்திருக்கும்…
சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே ! – நாரா. நாச்சியப்பன்
சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே ! ஆதிமுதல் தாயே! அருந்தமிழே ! நல்வாழ்த்து ! சாதிவரு முன்னே தமிழ்நாட்டில் மக்கள் பிறந்து சமத்துவமாய்ப் பேருலகில் வாழச் சிறப்புடனே பெற்றெடுத்த செந்தமிழே நல்வாழ்த்து ! கண்ணகியைப் பெற்றெடுத்துக் கற்பின் திறங்காட்டி மண்ணுலகைச் சீர்படுத்தும் மாணிக்கச் செந்தமிழே! ஔவைமூ தாட்டி அறம்பாடக் கூழுட்டிச் செவ்வை புறவளர்த்த செந்தமிழே நல்வாழ்த்து ! போரில் புறங்கொடுத்த புல்லன் மகனென்றால் மார்பறுக்கத் தான்துணியும் மங்கையினைப் பெற்றவளே ! தாய்நாடு வாழத் தனதருமைச் சுற்றமெலாம் போய் வீரப் போர்புரியப் போக்குந் திருமகளை ஊட்டி…
தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 1-5 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 6-10 மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! (6) இன்னமு தாகிய என்னனே யேஉனை என்னித யாசன மேற்றினேன்-கன்னலின் செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட வந்தருள் செய்கவே வாழ்த்து. (7) வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும் உன்னருளே தாராய் உவந்து. (8) தமிழ்படித்த தாலிவர்கள்…
தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்
தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன் தான்வாழத் தமிழ்கற்றுக் கொண்ட கேடன் தமிழ்வளர்ச்சிக் கிடையூறு செய்கின் றானால் வான்மீதும் தமிழுணர வேண்டு மானால் வண்மொழியைக் கற்கவரும் யாவ ரையும் “நான்வாழ வகைசெய்யும் நற்றா யேநின் நலத்திற்கோர் இடையூறு வருங்கா லத்தில் நான்மாள நேர்ந்தாலும் அஞ்சா துன்றன் நலங்காப்பேன்” என உறுதி பகரச் செய்வீர் -பாவலர் நாரா. நாச்சியப்பன்