நாலடி இன்பம்-4. மன்னர்களே கவனியுங்கள்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்-4. மன்னர்களே கவனியுங்கள்!   யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. பொருள்: யானையின் கழுத்து அழகுபட ஒளிவிட்டு விளங்கும்படி, வெண்கொற்றக் குடை நிழலில் பல படைகளுக்குத் தலைவராய் வெற்றி உலாச் சென்ற அரசர்களும் மற்றதீவினை கெடுக்க, அதன் காரணமாகக் தாம் திருமணம் செய்துகொண்ட மனைவியைப் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி முன் பெருமித நிலைக்கு மாறான வறுமையாளராகி நிலைகுலைவர். சொல் விளக்கம்: யானை=யானையினது; எருத்தம்=பிடரியில்; பொலிய= ஒளிவிட,…

நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்

நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்  பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். பொருள்: குற்றமில்லாப் பெருஞ்செல்வம் பெற்றால் ஏர் ஓட்டி பெற்ற உணவைப் பலருடனும் பகுத்துண்க. ஏனெனில் செல்வம் வண்டிச்சக்கரம் போல் மேல் கீழாகமாறி மாறி உருளும். சொல் விளக்கம்: துகள் தீர்=குற்றமற்ற; பெரும்=பேரளவு சொத்து; தோன்றியக்கால்=தோன்றினால் (அஃதாவது தோன்றாமலும் இருக்கலாம்); தொட்டு=அது முதல்;பகடு = எருது; நடந்த=உழுத; கூழ்= உணவை, பல்லாரோடு= பற்பலருடன்;…

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே! அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க. சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு…

நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…