நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சடலம் ஆக்கிச் சிதைத்தானோ? ஐயோ! சிதைத்துச் சடலம் ஆக்கினானோ? சுவரில் அடித்த செம்மண் கலமாய், சிதறிக் கிடந்த உடல்கள் மீது, சிறுநீர் கழித்தும் அடங்கா வெறியில், சிரங்களை அறுத்து ஒருபுறம் குவித்து, சித்திரம் போன்ற நம்குலப் பெண்களின், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நீசன், செந்தமிழ் மார்பை அறுத்தானே! நாமும் செய்வ தறியாது திகைத்தோமே! சிதிலம் அடைந்த உயிர்கள் கண்டு, விதியென் என்றொதுங்கி  வீழ்ந்திட மாட்டோம், உதிரம் கொதித்துத் தமிழன்னை அருளால், விரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்! சிறுவர், மழலையர்…

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்

சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்   சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம் மறைமலை இலக்குவனார்,  செயலர், தமிழகப்புலவர் குழு, சென்னை 600 101

சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!

தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31.   தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…

தமிழ்த்தேசியப்போராளி இலெனின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல்

பங்குனி 16,  2047 / மார்ச்சு 29, 2016   மாலை 5.00  பெண்ணாடம் ‘தோழர் இலெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும்’  நூல் வெளியீடு   தலைவர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்நாடு விடுதலைப் படையைக் கட்டியெழுப்பி தமிழ்த்தேச விடுதலைப் போராட்டக்களத்தில் இன்னுயிர் ஈந்த தோழர் இலெனினுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்குவோம்! பங்குனி 16 – மார்ச்சு 29 அவரது நினைவுநாளில் ஒன்றுகூடுவோம்! தமிழ்த்தேச மக்கள் கட்சி கடலூர்

முனைவர் க.இந்திரசித்து நினைவேந்தல் நிகழ்வு – உடுமலைப் பேட்டை

மறைந்த பேராசிரியர்  “முனைவர் க.இந்திரசித்து” நினைவேந்தல் நிகழ்வு!   தி.ஆ.2047, கும்பம் (மாசி):23 / 06.03.2016 ஞாயிறு காலை 9:30மணிக்கு உடுமலைப் பேட்டை, தளிச் சாலையில் உள்ள கிளை நூலகத்தில்  நிகழ உள்ளது! ஐயாவின்பால் தொடர்புள்ள மாணாக்கர்கள் , பேராசிரியர்கள் , பெரியார் தொண்டர்கள் , தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் ஆகியோருள் ஒருவராய்த் தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம்! அன்புடன் உடுமலை நூலக வாசகர் வட்டம், உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம். 9842091244 9842218014 9486153494

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

பூவுலகு நெடுஞ்செழியன் நினைவேந்தல்

மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.00 சென்னை 4   காணொளி நேர்காணல்   தமிழகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுதியவருள் முதன்மையானவராக அடையாளங்காணப்படுபவர் தோழர் நெடுஞ்செழியன். தாராளமய உலகமயப் பொருளாதார மாற்றங்கள், சூழலிய நிலைமைகளில் ஏற்படுத்திய எதிர்விளைவுகளை இடதுசாரிப் பின்புலத்தில் திறனாய்ந்தவகையிலும், சூழலியல் சிக்கல்களை சித்தாந்தப் பின்புலத்தில் அணுகியவகையிலும் இன்றளவிலும் அவரது சிந்தனைகள் மீள் வாசிப்பு கோருபவகையாகவே உள்ளன. அவ்வகையில் பசுமை இலக்கியத்திலும் சூழலியல் அமைப்புகளுக்கும் தோழரின் சிந்தாந்த/நடைமுறை பங்களிப்புகளை நினைவுகூர்வது அவரது நினைவு நாளில் அவருக்குச்…

மக்கள் கலைஞர் முனைவர் குணசேகரன் நினைவேந்தல், புதுச்சேரி

மக்கள் கலைஞர் முனைவர் கரு. அழ. குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் நாள் : தை 17, 2047 / 31. 01. 2016 – ஞாயிறு காலை 10 மணி  இடம் : பல்கலைக்கழகம் மரபுநிலை அரங்கம் புதுவை பொறியியல் கல்லூரி எதிரில் காலாப்பட்டு, புதுச்சேரி அன்புடையீர் வணக்கம்.   என் கணவரும், புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைப் புல முதன்மையரும், பேராசிரியருமான முனைவர். கரு. அழ. குணசேகரன் தை 03, 2047 / 17. 01. 2016 அன்று காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம்…