மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)

ஆடித் திருவாதிரையில் இராசேந்திர சோழன் பிறந்த நாள் விழா மாமன்னன் இராசேந்திர சோழன் 1000ஆவது முடிசூட்டு விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மக்கள் வெள்ளத்தோடு சீரோடும்சிறப்போடும் ஆடி 8, ஆடி9, 2045 / 24, 25-சூலை, 2014 நாள்களில் நடைபெற்றது. விழாவில் மாமன்னன் இராசேந்திரன் பற்றிய நூலும் குறுந்தகடும் வெளியிடப்பெற்றன. கருத்தரங்கமும் நடைபெற்றது.     கங்கை கொண்ட சோழபுரம் காட்சிகள்   சூலை ‘கண்ணியம்’ இதழில் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை, இந்திய அரசும் தமிழக அரசும்…

“நான் முகவரி அற்றவளா?” – புத்தகம் வெளியீட்டு விழா

    நான் முகவரி அற்றவளா? …. அன்று நடைபெற்றது. செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கின. புத்தகவெளியீட்டை வைகோ, காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளியிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி, இளங்கோவன் ஆகியோருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார். மாளவிகாவின் தந்தை மருத்துவர் சிவகணேசன் வைகோவிற்குப் பொன்னாடை அணிவித்தார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் புத்தக ஆய்வுரை ஆற்றினார். வைகோ வின் சிறப்புரைக்குப்பின் ஓவியர் சந்தானம் உரையாற்றினார். அருணகிரி நன்றி நவின்றார்.

மனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு

       [கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.] அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த மடல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா இன்று (ஆடி 11 2045, சூலை 27,2014) நடைபெற்றது. இவ்விழாவில், “அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், மடல் எழுதுகிற ஒரு மன…

பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா

வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு   பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…