சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 671- 676

( தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 671 – 676 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 671.  பூவராகம் (பிள்ளை) – நிலப்பன்றி (1930) 1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார். பூவராகனார் சிறந்த அறிவாளியாக விளங்கினாலும் பெருமிதத்தை மேற்கொண்டவரல்லர். அடக்கத்தையும் அமைதியையும் அணிகலனாகக் கொண்டிருந்தார். எப்பொழுதும் நூல்களைப் படிப்பதே இவருக்கு…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 30

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 29 தொடர்ச்சி) என் சரித்திரம் தொடர்ச்சி அத்தியாயம் 17 தருமத்தை இவ்வாறு வளர்த்து வந்த கிராமங்களுள் குன்னம் ஒன்று. அங்கே அடிக்கடி புலவர்களும் கவிராயர்களும் பாகவதர்களும் இவர்களைப் போன்றவர்களும் வந்து சில தினம் இருந்து தங்கள் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்வார்கள். புலவர் வருகை திருநெல்வேலியைச் சார்ந்த புளியங்குடி முதலிய இடங்களிலிருந்தும் கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாகவும் இருவர் மூவராகவும் தனியாகவும் புலவர்கள் வருவார்கள். எல்லாரும் இலக்கண இலக்கியப் பயிற்சி நிரம்ப உடையவர்க ளென்று சொல்ல…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28   4. குலமும் கோவும் தொடர்ச்சி சனநாத சோழன்     இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.        “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்        அடிதழீஇ நிற்கும் உலகு” என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  32  சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர்.  தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை,         முதலிற் கூறும் சினையறி கிளவியும்         சினையிற் கூறும் முதலறி கிளவியும்         பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும்         இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்         வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ        …

தமிழ்நாடும் மொழியும் 32: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி மைசூர் மன்னர்கள் மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி:            அதோ            பாரடி            மயிலே                                       அதோ  பாரடி                                       மயிலின்        அழகு  பாரடி                              இதோ           பாரடி            இனிமை                                              இன்னும்        பாரடி                                       இருசிட்         டிணைதல்      பாரடி                              கொஞ்சம்                 பாரடி            கிளிகள்                                       கொஞ்சல்                பாரடி                                       அணிலும்                விரைதல்        பாரடி                             …

8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3  – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3  தொடர்ச்சி) 8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 ‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர், விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார். “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோபாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி, என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 663 -670

( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 663. பிரதமை திதி               –              முதல்நாள் 664. துவிதியை திதி            –              இரண்டாம் நாள் 665. திரிதியை திதி              –              மூன்றாம் நாள் 666. சதுர்த்திய திதி             –              நான்காம் நாள் 667. பஞ்சமி திதி –              ஐந்தாம் நாள் 668. சசுட்டி திதி  –              ஆறாம் நாள் முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 29

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 28 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 17தருமம் வளர்த்த குன்னம் உத்தமதானபுரத்தில் நாங்கள் சில காலம் இருந்த போது என் தந்தையார் பாபநாசம் முதலிய இடங்களில் உள்ள செல்வர்களிடம் சென்று வருவார். ஒருமுறை பாபநாசத்திற் சில பிரபுக்களுடைய வேண்டுகோளின்படி சில தினங்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அவர் பாடிப் பொருள் கூறி வந்தார். சரித்திரம் நிறைவேறியவுடன் அப்பிரபுக்கள் 70 உரூபாய் (20 வராகன்) சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். என் தந்தையாருடைய கதாப்பிரசங்கத்தின் முடிவில் இருபது வராகன் சம்மானம் அளிப்பதென்பது ஒரு பழக்கமாகி…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):27  4. குலமும் கோவும் தொடர்ச்சி சுந்தர சோழன்     அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபும் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு                             விளங்குகின்றன. இம்மன்னனைப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 31 அவை சொற்கள் சேருங்கால் அவற்றைச் சேர்ப்பதற்குத் துணைபுரிவன, வினைச்சொல்லில் காலத்தைக் காட்டி நிற்பன, வேற்றுமை அறிவிக்கும் உருபுகளாகி வருவன, அசைகளாக நிற்பன, இசை நிறைத்து நிற்பன, தத்தம் குறிப்பால் பொருள் தருவன, ஒப்பில் வழியால் பொருள் செய்குந என எழுவகைப்படும். இவை சொற்களாக உருவாகி நிற்றல் மட்டுமன்றி, சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும். தம் ஈறு திரிந்தும் வரும்;  ஓரிடைச் சொல்லை அடுத்தும் வரும்.   சொற்றொடர்களில்  நின்று பலவகைப் பொருள்களை அறிவிக்கும்…

தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை…