வெள்ளாளர் கல்வி விழா!

கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா! 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் ‘தங்க விருது’ பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் ‘வெள்ளாளர் கல்வி விழா’, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை வரும் மே 31ஆம்  நாள் மாலை 4 மணிக்கு நகர்கோவில், வடசேரியில் உள்ள  இலெட்சுமி மகாலில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு, சான்றுரை வழக்குரைஞர் திரு. என். சிதம்பரதாணு…

பாவேந்தர் பள்ளியில் ஓவியப் போட்டியும் பரிசும்

       பாவேந்தர் பள்ளியின் மாணவர் அணியின் சார்பில் பாவேந்தர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது.  இயற்கையைப் போற்றும் வகையில், குளிர்காலத்தை வரவேற்கும் நோக்கில் ‘சிற்றூர்’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.  4, 5ஆம் நிலை மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.           மாணவர் அணியைச் சார்ந்த த. நவீன், ந. கோபி, தருண், ஆ.பாபு போட்டியை நடத்தினர்.   போட்டியில் வெற்றிபெற்றோர்       ச.மோ. துர்கா, தே.ரா. தினேசு, வா.சி. யாமின், வ.கு. சந்தோசு, அ.இ. மணிகண்டன் ஆகிய மாணவர்களுக்கு வெற்றிப்…

 சீனத் தமிழ் வானொலி பொன்விழா போட்டி – அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்!

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள்  தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்…