இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி   இவ்வாறே படர்க்கை ஒன்றன்பால், பலவின்பால், தன்மை, முன்னிலை விகுதிகளும் தமிழ்க் குடும்ப மொழிகள் அனைத்திலும் ஒரே வகையாக அமைந்துள்ளமையைக் காணலாம். விரிக்கின் பெருகுமாகையால் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதை விடுத்து இனி எண்ணுப் பெயர்களை நோக்குவோம்.   தமிழ்                      மலையாளம்        கன்னடம்   தெலுங்கு  ஒன்று                      ஒன்னு                      ஒந்து                         ஒகட்டி  இரண்டு     ரண்டு                      எரடு              இரடு  மூன்று                   …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி வேற்றுமை   திராவிட மொழிகளில் எல்லாம் வேற்றுமைகள் எட்டெனவே கொள்ளப்பட்டுள்ளன. வேற்றுமைகளை அறிவிக்கும் உருபுகள் பெயர்க்குப் பின்னால் பெயருடன் சேர்ந்து வருகின்றன. இவ் வுருபுகள் தொடக்கத்தில் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாக இருந்து நாளடைவில் தனித்தியங்கும் இயல்பு கெட்டு இடைச்சொற்கள் நிலையை அடைந்து விட்டன என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றார். இந் நிலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் அவை வேற்றுமையுணர்த்தும் உருபுகளாகவே கருதப்பட்டு இடைச்சொற்களாகவே…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  5. பழந்தமிழ்ப் புதல்விகள் பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர்   எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும்   உன் உதரத்து  உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்மொழி பல மொழிகட்குத் தாயாயுள்ள செய்தியை இனிமையுற எடுத்து மொழிந்துள்ளார்கள்.   இன்று திராவிட மொழிகள்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம்.   கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது.             கடியென் கிளவி            …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள்  மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன  அல்ல;  மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும்.   இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன  என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ்   தொல்காப்பியர் காலம் ஆரியர்கள் தென்னாட்டில் குடியேறிய காலம். அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். அக்கால நிலையைத் தெளிவாக அறிவிப்பது தொல்காப்பியமே. தொல்காப்பியர் அவர்க்கு முன்பிருந்தோர் இயற்றிய நூல்களையும், அவர் காலத்து நூல்களையும் அவர் கால வழக்கினையும் நன்கு ஆராய்ந்து மொழியிலக்கணமும் இலக்கிய இலக்கணமுமாகப் பயன்படத் தம் நூலை ஆக்கித் தந்துள்ளார். அத் தொல்காப்பியத்துள் பயின்றுள்ள பல சொற்கள் இன்றும் தமிழை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்காப்பியச் சொற்களுக்கு உரிய அகராதியை ஒருமுறை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ் தொடர்ச்சி   ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட  (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக  உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714)   மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ 1

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை) இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 1. மொழியின் சிறப்பு  மக்களினத்தைப் பிற உயிர்களினும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும். மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும். ஆனால், மக்களினம் மொழியின்றி வாழ்ந்த காலமும் உண்டு.   மொழியின் துணையின்றித் தமக்குத் தாமே  செய்து கொள்ளக்கூடிய செயல்கள் பல உள. பிறர் கூட்டுறவுடன் செய்து கொள்ளக்கூடிய செயல்களும்  சில உள. நாம் ஆற்ற வேண்டிய செயலில் சிக்கல் சிறிது இருப்பினும் அதனை நீக்கிக்கொள்ளப் பிறர்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின்  பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…