அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி) “நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?” “மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?” “அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே” என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன். “உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 42

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…