பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 31 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
( ஆனி 13, 2046 / சூன் 28, 2015 தொடர்ச்சி) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 29 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 29 அங்கம் : ஆண்சிட்டு, பெண்சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (ஊடல் கூடல்) (சிட்டுகள் சின்ன சிரிப்பாலே சிறகால் அடித்து முகம் மலர்ந்து மெட்டுகள் போட்டு கீச் சீச் பண்பாடி ஆட்டம் போட்டுவிட) (கவிஞரும் அன்பும் கண்டதனைக் கண்களால் சிமிட்டிப் பேசியபின் புவியைப் பார்த்து மேல் நோக்கி புன்னகை வீசிய பொழுதினிலே) (காட்சி முடிவு) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 27 அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண் : பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங் : முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண் : ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 22 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி – 22 அங்கம் : கவிஞர், அன்பரசன் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (இன்றைய நாட்டு நிலையை நன்றே கவிஞர் செப்புகின்றார்) அன் : கவிஞரே! கருத்துப் பெட்டகமே! புவியின் உண்மை நிலைதான் என்ன? கவி : இன்றைய நாட்டின் நிலைமைதனை நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு! சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம் முந்திட…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி) காட்சி – 19 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (பேடும் சிட்டும் மனமொன்றி ஈடுபடல் நல் இன்பத்தில்) பெண் : சீழ்க்கை ஒலியும்! கைத்தட்டலும் வானை முட்டுது! பார்த்தாயா? ஆண் : வாழ்வில் காண இன்பத்தை வாழ்த்தொலி மூலம் கண்டுவிடும் ஒருவகைக் கூட்டமாய் இருக்கலாம்! என்றே ஆண்சிட்டு விடையிறுக்க (குறுநகை கொண்டு பேடையும் சிட்டின் கழுத்தை நீவியது) (காட்சி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 18– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) காட்சி – 18 (நாடகக் காட்சி – 6) அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : பள்ளியறை நிலைமை : (கூடலிலே இன்பம் திளைத்த மனமோ தேடியே அதனை நினைக்கச் செய்ய இன்ப நினைவினை அசையாய்ப் போட்டு மென்று உதிர்க்கிறான் வெளியில் அதனை அருண் : வெள்ளி ஒளிக் கிண்ணத்திலே பாலின் சுவையிருக்க! கள்ளியவள் கன்னத்திலே கனியின் சாறிருக்க! மதியென வந்தாள்! மதியே நானென்று! சதிரென மொழிந்தாள் சதிரே…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 16– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) காட்சி – 16 (நாடகக் காட்சி : 5 அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : பள்ளியறை நிலைமை : (ஊடல் மிகுதியால் கூடிய பின்பு ஓடிய எண்ணத்தை உரைக்கின்றார்! இங்கே!) அருண் : கலைவாளர் மதிமுகமே! நிலைபுகழ் எழில் வடிவே! மலைமகள் உருவெடுத்தும் சிலையயன இருப்பது ஏன்? பூங் : விடிநிலவும் வந்ததத்தான் விடியுமெனச் சொல்லிவிட துடியிடையும் நோகுதத்தான்! மடியிடையில் நீர் இருக்க! (காட்சி முடிவு) (பாடும்)…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 15– ஆ.வெ.முல்லை நிலவழகன்
[முன்தொடர்ச்சி] காட்சி – 15 அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (கூடலுக்காக முற்றம் வந்தும் கூடிட அவளோ இல்லாததாலே ஊடல் அருணை வாட்டிடச் செய்ய! தேடியே குயிலை அலைகின்றான் தன்னுரையாக மனத்தில் எழுந்த எண்ணத்தை இங்கே உரைக்கின்றான்!) அருண் : வெள்ளி நிலா முற்றத்திலே பள்ளி கொள்ளவந்தால் நான்! கள்ளியவள் மறைந்தெங்கோ! தள்ளியயன்னைச் சென்றாளோ! மையிருட்டே! உன்னையவள்! பொய்யிருட்டாய் ஆக்கிடுவாள்! கைசுருட்டி ஓடி விடு! மெய்யுருட்டிச் சொல்லுகிறேன்! படுத்துறங்கும் வேளையிலே உடுத்தியவள் வருவாளோ? பால்பொழிய…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 14– ஆ.வெ.முல்லை நிலவழகன்
[மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி] காட்சி – 14 அங்கம் : கவிஞர், அன்பரசன் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (நாடகமாடுவோர் அழகுகளை நயம்பட எடுத்துக் கூறியபின் ஓடிய முடியூர் எண்ணத்தை உரைக்கின்றார் கவிஞர் அன்புக்கு) அன்ப : இத்தனை அழகு இருவருக்கும் இருக்க வேண்டுமா? நடிப்பதற்கு! சத்தியமிட்டே சொல்கிறேன்! இருவருமே நல்ல அழகுதான்! கவி : பார்த்ததும் மனதிலோர் ஒழுக்கத்தைப் பரப்பிடும் அழகு ஒன்றென்றால் பார்த்ததும் காம இச்சைதனை எழுப்பிடும் அழகினை இரண்டெனலாம்! எவ்வகை…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல; கணவனே! வந்தேன்! பூங் : இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! காட்சி – 6 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : குடில் முன் உள்ள மரக்கிளை நிலைமை : (நாடகம் பற்றிய கருத்துரையில் பேடும் சிட்டும் ஈடுபடல்) ஆண் : நாடகம் எப்படி உள்ளது சொல்? பேடே! நீயும் பெண் தானே! பெண் : எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல? உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு! ஆண் : நடப்பிற்கும்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி) காட்சி –3 அங்கம் : கவிஞர், அன்பரசன், இடம் : கவிஞரது குடில் நிலைமை : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்! வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப : காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி : யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப : …