இதழியலாளர் பாரதி – ஆவணப்படம் திரையிடல்
இதழியலாளர் பாரதி ஆவணப்படம் திரையிடல் 27 நிமிடம் ( இயக்கம் – அம்சன் குமார் )பங்கேற்பாளர்கள் .. இதழாளர் மாலன் இதழாளர் திருப்பூர் கிருட்டிணன் …
பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அறிவிக்க தருண் விசய் முயற்சி
பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை விடுதலைப் போராட்ட நினைவகமாக அறிவிக்க வலியுறுத்துவேன்! – தருண் விசய் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டுக் கடந்த ஆவணி 26, / செப்.11 அன்று தில்லித்தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் உருவச்சிலைக்குத் தமிழார்வலரான உத்தரகண்டு நா.உ. தருண்விசய் மாலை அணிவித்தார். “தமிழ் மொழிக்குத் தேசிய அளவில் முழுமையான அறிந்தேற்பு கிடைக்க வேண்டும்.” என்று அவர் அப்பொழுது தெரிவித்தார். மேலும், பாரதியார் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை அறிய வந்ததாகத் தெரிவித்தார்….
மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்
அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.) செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…
புரட்சியாளர்கள்- பேராசிரியர் சி.இலக்குவனார்
உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, இயேசு, மார்க்சு, உரூசோ, மகம்மது போன்ற வெளிநாட்டுப் புரட்சியாளர்களும், புத்தர், திருவள்ளுவர், கபிலர், சாந்தி போன்ற நம் நாட்டுப் புரட்சியாளர்களும் தோன்றியிராவிடின் மக்கள் நிலை மாக்கள் நிலையில்தான்…
வரலாற்று வானத்தில் – ஔவை து.நடராசன்
அசையும் கிளையில் அமர்ந்து கொண்டு நாட்டைப் பற்றி இசை பாடிக் கொண்டிருந்தது ஒரு குயில். அரங்கத்தின் நின்று கொண்டு இனிய தமிழை மிழற்றிக் கொண்டிருந்தது ஒரு கிளி. இன எழுச்சி என்ற பள்ளி எழுச்சிக்கு ஓசை கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு காக்கை. வரலாற்று வானத்தில் இந்தப் பகுத்தறிவுப் பறவைகள் வட்டமிட்டதால் பாட்டுத் தமிழின் பரணி இன்று எங்கும் விளங்குகிறது. பேச்சு முரசு எங்கும் முழங்குகிறது. இன விழிப்பு எங்கும் துலங்குகிறது. விடுதலை நாடு இருளின் வீடாக விளக்கணைந்து இப்படித் தொண்டு…
பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்
வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க!
இந்நாட்டு மும்மணிகள் – பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா…
பேரா.வீ.அரசு மணிவிழா அறக்கட்டளை தொடக்க விழா
ஆவணி 23, 2045(08.09.2014) தொடங்கி வைப்பவர் : தோழர் இரா.நல்லகண்ணு பொழிஞர் : திருமிகு வ.கீதா
பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்
‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது? தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில் வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’ ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…
எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய் – பாரதியார்
தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய். சாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘சாதியிரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள். பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம். தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதிக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட…
தெய்வமாக விளங்குவீர் நீரே ! – பாரதியார்
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே ! இயந்திரங்கள் வகுத்திடுவீரே ! கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே ! கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே ! அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே ! பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே !! மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே ! மரத்தை வெட்டி மனை செய்குவீரே ! உண்ணக் காய்கனி தந்திடுவீரே ! உழுது நன்செய்ப் பயிரிடுவீரே ! எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே ! இழையை நூற்று நல்லாடை செய்வீரே…