எழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6 அழகிய தையலை யன்புடன் மணக்க செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில் மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன் மணத்தால் நமது பணத்தைப் பகுக்க எண்ணினோ மல்ல; எண்ணி னவளும் வேளி ரொருவனை விரும்பி மணப்பின் பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம். அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க அழகிய தங்கை யற்பக் கூலியை சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை மணந்தால் வருவது மானக் கேடென எழிலர சிக்குறு மின்ப வாழ்விற் சிறுதி…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) எண்ணினர் தனியே யிருப்பதா யோர்நாள் காதலின் கையிற் கருவிய ராகி இன்ப வாடல்க ளன்பாய்த் தொடங்கினர். தென்றல் தவழ்ந்து தேனுறு மலரினும் முத்த மளித்து முகமலர் கொண்டே இன்ப மெய்து மெழினெறி கண்டே எழிலர சிக்கோ ரின்ப முத்தம் ஆடலன் விரும்பி அன்பி னளித்தான். காதல் கைமிகக் கருத்தழிந் தவளும் நிரைவளை முன்கை விரைவி னீட்டி இளமுலை ஞெமுங்க வளைந்து புறஞ்சுற்றி “ நின்மார் படைதலின்இன்பமு மின்று ” நன்றே வாழ்க…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி) கரையிடை யிட்ட காட்டா றிரண்டு கலந்தொன் றாகிக் கரைகடந் தோட எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின் குலமுங் குடியும் கொடிய சாதியும் உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும் எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம் இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர் “மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில் உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்” என்றறிந் திருவரும் எவருங்காணா இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர் இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில் வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5. எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 14– ஆ.வெ.முல்லை நிலவழகன்
[மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி] காட்சி – 14 அங்கம் : கவிஞர், அன்பரசன் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (நாடகமாடுவோர் அழகுகளை நயம்பட எடுத்துக் கூறியபின் ஓடிய முடியூர் எண்ணத்தை உரைக்கின்றார் கவிஞர் அன்புக்கு) அன்ப : இத்தனை அழகு இருவருக்கும் இருக்க வேண்டுமா? நடிப்பதற்கு! சத்தியமிட்டே சொல்கிறேன்! இருவருமே நல்ல அழகுதான்! கவி : பார்த்ததும் மனதிலோர் ஒழுக்கத்தைப் பரப்பிடும் அழகு ஒன்றென்றால் பார்த்ததும் காம இச்சைதனை எழுப்பிடும் அழகினை இரண்டெனலாம்! எவ்வகை…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 11 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் : அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் : அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் : விசிலும் ஊதித் திரை நீக்கி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 9 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(தை 11, 2046 / சனவரி 25, 2045 தொடர்ச்சி) காட்சி – 9 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (சிட்டே தனது எண்ணத்தைச் சிறிதே விளக்கிடப் பெண் சிட்டோ பட்டென இருளைக் கிழித்தாற்போல் பகன்றிடச் சிட்டோ திகைக்கின்றது) ஆண் : அன்புப் பேடே! அறுசுவை உணவை கணவனுக்குத் திருமகள் வடிவாய் வந்திங்கு நன்றே படைத்தைப் பார்த்தாயா? என்றே ஒருவர் கேட்பதைப்பார்! பெண் : உணவேயின்றி…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி) காட்சி – 5 (நாடகக் காட்சி – 1) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (அருண் மொழி வருகைக்காகத் திருமகள் காத்தே இருக்க வருகின்றான் அருண்மொழி ஆங்கே! பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!) அருண் : கண்ணானக் கண்ணே! ஏனிந்த வாட்டம்? பெண்ணே! நான் நீங்கிச் சென்ற…