நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417  

இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு

(இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1 இன் தொடர்ச்சி) 2   பாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும்.   ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது.   பன்னாட்டு அமைப்புகளில்…

இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு

1  பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று! அதுதான் இது!   பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்….

கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை

கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்   மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் ‘சொல்லோவியம்‘ என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப்…

பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து!   பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!   பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து!   பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து!   பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து!   பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து!   பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து!   பொங்கல் திருநாள்  புதுக்கட்டும் சாதிமதம்…

தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014

பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014   ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது;   தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…