பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!   புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன்.   முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக்…

புதுச்சேரி தனித்தமிழ்இயக்கத்தின் தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி

தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி தனித்தமிழ் இயக்கம் நடத்துகிறது! பரிசு உரூபா 1000.00 கடைசிநாள்: மாசி 16, 2048 /  28.2.2017 சிறுவர்கள் படித்தும் நடித்தும் மகிழ்வதற்கேற்ற 3 பக்க நாடகங்கள் 2 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உரூபா 300.00 இரண்டாம் பரிசு உரூபா 150.00 மூன்றாம் பரிசு உரூபா 100.00 ஆறுதல் பரிசுகள் உரூபா 90.00 ஐந்து பேர்களுக்கு. நெறிமுறைகள் 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழில் நாடகங்கள் இயற்றப்பட வேண்டும் 3.நாடகங்கள் மதநம்பிக்கை தவிர்த்த பகுத்தறிவு,அறிவியல் முதலிய  புதிய கருப்பொருள்களில்…

கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்

கிரண்(பேடி)  – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா?   துணைக்கண்டமாகத் திகழும்  இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி  இந்திய ஒன்றியம் என்றுதான்   அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர்.   மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.   இந்தியா…

மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்கு விருது

புதுவை மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்குக் குன்றக்குடி அடிகளார்விருது  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புது நூற்றாண்டு (என்.சி.பி.எச்.) புத்தக நிறுவனம் இணைந்து விருது வழங்கும் விழா – 2016  நடத்தின.  புதுக்கோட்டையில் நடைபெற்ற இவ் விழாவில் சிறந்த நூல்களுக்காண விருதுகள் பல துறைகளில் வழங்கப்பட்டன. சிறுவர் இலக்கியத்துக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை‘ சிறுவர் பாடல் நூலுக்கு வழங்கப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாசுகரன் …

முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

முத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள்   அரவக்குறிச்சி, கிருட்டிணகிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களை மறு தேர்தல் என்றோ இடைத்தேர்தல் என்றோ குறிப்பிடுகின்றனர். இரண்டு பொதுத்தேர்தலிடையே நடை பெறும் தேர்தல் இடைத்தேர்தல்  என்ற வகையில் இது சரிபோல்தான் தோன்றும்.   தேர்தல் நடைபெற்று – அஃதாவது வாக்குப்பதிவு முடிந்தபின்னர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் அல்லது தொகுதியில் நடைபெறும் தேர்தல்தான் மறு தேர்தல். தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர் மறைவால் நடைபெறும் தேர்தலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில்  ச.ம.உ. விலகியதால் ஏற்படும் தேர்தலும் இடைத்தேர்தல்கள்.    அரவக்குறிச்சி,…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில்  நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில்   முனைவர் க.தமிழமல்லன  பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில்  நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…

புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்

புதுச்சேரி ஆளுநர்  தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்  ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது.  தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….

உலகத் தொல்காப்பிய மன்றம், தொடர்பொழிவு- 6, புதுச்சேரி

  வைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை   உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ‘தொல்காப்பியம் – மரபியல்’ என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு நடைபெறுகின்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்!

ஆறு தலைமுறையினரின்அரிய சந்திப்பு, தாகூர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை

சித்திரை 19, 2047 / மே 02, 2016 காலை 10.00 புதுச்சேரி  தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆறு தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் சந்திக்கும் அரிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்றைய இளம் தலைமுறைத் தமிழ்ப் பேராசிரியர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு இது.     இந்நிகழ்வில் ஆறு தலைமுறை ஆசிரிய மாணவப் பரம்பரைப் பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-  தலைமை:…