பாரதிதாசன் 126ஆவது பிறந்தநாள் விழா, புதுச்சேரி

சித்திரை 16, 2047 / ஏப்பிரல் 29, 2016 காலை 10.00 அனைத்திந்தியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் விருது வழங்கல் முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் இதயகீதம் இராமாநுசம் புலவர் இரா.இராமமூர்த்தி

வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை

  வேட்பாளர்களும்  வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை     வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.   வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.   தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு  (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.  …

புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் விழா,  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.   விழாவில்  பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர்   புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்   துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு  துணைச்செயலர்…

“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – புதுச்சேரி

  பெருந்தகையீர்! வணக்கம். புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம்   பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கின்றது. தங்கள் பங்கேற்பை விரும்பி அழைக்கின்றோம். அறிவன்புடன் திட்ட ஒருங்கிணைப்பாளர். நன்றி!

புதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்

  தனித்தமிழ் இயக்கமும் புதுவைத் திருக்குறள்மன்றமும் இணைந்து வீடுதோறும் திருக்குறள் அன்பளிப்பாகத் தரும் முயற்சியில் 2047 மாசி / கும்பத்திங்கள் 11ஆம் (23.2.2016) நாளில் ஈடுபட்டன.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் முதலியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.   புதுச்சேரிச் சிவாசி நகரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை வரவேற்றனர்.

புதுச்சேரி – தனித்தமிழ்க் கழகத்தின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஒளிப்படங்கள்

  .ஆ. 2047   மாசி – கும்பம் 3  -15.02.2016 புதுச்சேரி தனித்தமிழ்க் கழகம் நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா! தலைமை :பெ.தமிழ்நாவன் வரவேற்புரை: சீனு.அரிமாப்பாண்டியன் கருத்துரை: சி.தமிழ்மாறன், சி.வெற்றிவேந்தன், முத்து.சேரன், புதுவைத் தமிழ்நெஞ்சன் சிறப்புரை: முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் நன்றியுரை: கு.அ.தமிழ்மொழி   [ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]

வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

  உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.   அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர்  என்னும் விருது வழங்கப்பெற்றது.    படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி  முனைவர் க.தமிழமல்லனுக்கு  வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.   படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.

மக்கள் கலைஞர் முனைவர் குணசேகரன் நினைவேந்தல், புதுச்சேரி

மக்கள் கலைஞர் முனைவர் கரு. அழ. குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் நாள் : தை 17, 2047 / 31. 01. 2016 – ஞாயிறு காலை 10 மணி  இடம் : பல்கலைக்கழகம் மரபுநிலை அரங்கம் புதுவை பொறியியல் கல்லூரி எதிரில் காலாப்பட்டு, புதுச்சேரி அன்புடையீர் வணக்கம்.   என் கணவரும், புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறைப் புல முதன்மையரும், பேராசிரியருமான முனைவர். கரு. அழ. குணசேகரன் தை 03, 2047 / 17. 01. 2016 அன்று காலமானார். அவரது உடல் கருவடிக்குப்பம்…

1 3 4 5 8