சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால்,  இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில்  இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு.  இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா? அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா?…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12 –  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11–  தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே   மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்   அதனால், யானுயிர் என்பதறிகை   வேன்மிகு…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   4 வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய்‘ (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன்…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3.

 (சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   3 1. கபிலர்  தொடர்ச்சி  மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய…